நெடுந்தீவில் சரிந்த டக்ளசின் 60 அடி நீர்தாங்கி!
நெடுந்தீவு மக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நீர் வழங்கல் அதிகாரசபையினால் அமைக்கப்பட்டு வந்த தண்ணீர்த்தாங்கியே; இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த நீர்த்தாங்கியானது கடந்த ஒரு வருடகாலமாக நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட அறுபது அடி உயரமான நீர்த்தாங்கியானது உரிய தராதரத்துடன் செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் அதனாலேயே அது வீழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/80564.html
யாழ்தேவியில் ஆமி ரணகளம்…..
உறங்கல் இருகை பெட்டியை சோதனைக்கு உட்படுத்தும் பரிசோதகர் மீதே இந்த மூவரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
ஒதுக்கப்பட்டிருந்த உறங்கல் இருக்கை பெட்டியில் அமர்ந்திருந்த படையினர் மூவரையும் அங்கிருந்து செல்லுமாறு பரிசோதகர் கேட்டுக்கொண்டபோதே இந்த மூவரும் பரிசோதகர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பரிசோதகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பரிசோதகர், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் மூவரும் பனாகொடை இராணுவ முகாமைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/80577.html
அடுத்த பிரதமர் யார்?? நடவடிக்கையில் மகிந்தர்….
பிரதமர் பதவி உட்பட முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் எற்படலாம் என்றும் புதிய முகங்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை பெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் பதவி உட்பட அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என கடந்த ஆண்டும் மூன்று தடவைகள் செயதிகள் வெளியாகியிருந்தன. ஆனால் புதிய பிரதமர் மற்றும் சில அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக முரன்பாடுகள் எற்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் இரண்டு புதிய பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாளை மறுதினம் நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூத்த அமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் என கூறப்படுகின்றது.
அமைச்சர் பசில ராஜபக்ச புதிய பிரதமராக வரக்கூடிய வாய்ப்பகள் இருப்பதாகவும் உள்ளக தகவல ஒன்று தெரிவிக்கின்றது. 85 வயதான தற்போதை பிரதமர் டி.எம்.ஜயரட்ன அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும் கருத்து முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80580.html
Geen opmerkingen:
Een reactie posten