தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)!



அவலமான நிலையில் ஒரு தோட்டக் குடியிருப்பு
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 06:57.50 AM GMT ]
எப்போது கூரைத் தகடுகளை மாற்றி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், ஏக்கத்திலும் இருக்கின்ற மக்கள் பல தோட்டங்களில் தற்போதும் இருக்கின்றார்கள். இவ்வாறான தோட்டங்களில் ஒன்று தான் டிக்கோயா, வனராஜா மேல்பிரிவு தோட்டமாகும்.
இத்தோட்டம் டிக்கோயா நகரத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 12 வீடுகளைக் கொண்ட 2ம் இலக்க லயன் காம்பிராக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு, கூரைத்தகடுகள் அனைத்தும் சல்லடையை விட பெரிய ஓட்டைகளுடன் காணப்படுகின்றது.
காற்று, மழை, வெயில் பாராமல் மலைமேடுகளில் அலைந்து திரிந்து மிக கஸ்டத்திற்கு மத்தியில் உழைத்துக் கொண்டிருக்கும் இம்மக்கள், குடும்பத்தோடு சந்தோசமாக ஒருவேளை உணவு உட்கொள்வதற்கு கூட நிம்மதியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைநீரை அப்புறப்படுத்த பாத்திரங்கள் இருந்தாலும் உறங்குவதற்கு நாற்காலிகளையே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதோடு, விசேட நிகழ்வுகளின் போது இவர்களது உறவினர்கள் வருவதற்கு தயக்கம் காட்டுவதாகவும் மிக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து வாக்கு கேட்டு வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் தற்போது இப்பக்கம் தலைவைத்து கூட படுப்பதாக தெரியவில்லை.
இவ்வாறான அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை எந்தளவிற்கு அவதானிக்கின்றார்கள் என்பதே பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் சிலர் தங்களது உள்ளக் குமுறல்களை இவ்வாறு தெரிவித்தனர்.
என்.ஆறுமுகம் (வயது 67):
எங்களுடைய குடியிருப்புக்களுக்கு 1967ம் ஆண்டு தகரங்களை மாற்றினார்கள். அந்த நேரம் நான் இளைஞனாக இருந்தேன். நானும் தகரம் தூக்கிக் கொடுத்திருக்கேன். நானும் திருமணம் முடித்து இதே வீட்டில் தான் வசிக்கின்றேன். எங்களுக்கு சாபமோ தெரியவில்லை. எங்களுடைய நிலைமையைப் பற்றி யாரிடம் போய் கூறுவது. இன்று மாட்டுப்பட்டிகள் கூட மிக அழகாகவும், வசதியாகவும் உள்ளது. எங்கள் குடியிருப்புக்களோ மிகவும் கேவலமாக உள்ளது.
யோகேஸ்வரன் (வயது 51):
எங்கள் குடியிருப்பின் கூரைத்தகடுகள் அனைத்தும் மிக மோசமாக பழுதடைந்துள்ளன. மழைக்காலங்களில் எங்கள் வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் கூட எங்கள் நிகழ்வுகளை ஒழுங்காக செய்யமுடியாது.
உறவினர்கள் கூட வருவதற்கு தயங்குகின்றனர். மேலும், பாடசாலை பிள்ளைகள் இருக்கின்ற வீடுகள் சொல்லவே வேண்டியதில்லை. அவர்களது பாடசாலை உபகரணங்களை ஒழுங்காக பாதுகாப்பாக வைக்க முடியாது.
அப்படியொரு அவல வாழ்க்கையையே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற கனவுகளோடு இது தான் கதியென்று வாழ்ந்து வருகின்றோம்.
ஏ.கணேசன் (வயது 51):
தேர்தல் காலங்களில் எல்லா அரசியல்வாதிகளும் வந்தார்கள். வாக்கு சேகரித்தார்கள். பல உறுதிமொழிகளையும் வழங்கினார்கள். ஆனால் போனவர்கள் திரும்பி வரவும் இல்லை, எங்கள் குறை தீரவும் இல்லை.
இப்பிரச்சினை குறித்து தோட்ட நிர்வாகத்திடம் பல தடவைகள் கூறியும் எவ்வித பயனுமில்லை. எங்களைப்பற்றி யாருமே எண்ணிப்பார்க்கவில்லை என்றார்.
இவ்வாறான ஒரு பெரும் அவலநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmpy.html
யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 07:31.43 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தெளிவாக இருப்பதுடன், அவ்வாறு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் நடைபெற்ற பொலிஸாரின் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், யாழ்.கந்தர்மடம் பகுதியில் டி.ஜ.ஜியின் பெயரை பாவித்து தெற்கில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு பணம் சேகரிப்பதாக கூறும் கும்பல் நேற்றைய தினம் மக்களிடம் பணம் வாங்கியுள்ளது.
ஆனால் அவர்களுக்கும் பொலிஸாருக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.
அவ்வாறானவர்கள் மக்களுடைய வீடுகளுக்கு வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கொள்ளை- நடவடிக்கை எடுக்கவுள்ளதாம் பொலிஸ்
யாழ்.காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்து படையினரின் உதவியுடன் இரும்பு பொருட்கள் கடத்தப்பட்டுவரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்து இரும்பு பொருட்கள் தொடர்ச்சியாக கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாறு இரும்பு ஏற்றிச் செல்லப்படுவதனை அவதானித்தால் மக்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறு காங்கேசன் துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார் இலந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
 கடற்படையினருக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப் போகிறார்களாம் யாழ்.பொலிஸார்?
யாழ்.கீரிமலை கடற்படை முகாமிற்கு அருகில் உள்ள மக்களுடைய காணியை துப்புரவு செய்வதற்கு கடற்படையினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், மக்கள் கொடுத்த முறைப்பாட்டி னடிப்படையில் சிவில் வழக்கு தொடரப் போவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
கீரிமனை ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடற்படை முகாமிற்கு அருகில் பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் பாவனையற்று பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றது.
இந்நிலையில் பிரதேச சபையின் உதவியுடன் குறித்த காணிகளை துப்புரவு செய்வதற்கு, கடந்த மாதம் மக்கள் முயற்சித்திருந்தனர்.
இந்நிலையில் அதற்கு கடற்படை கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன், மக்களை காணிகளுக்குள் இறங்கவிடாமல் தடுத்து வெளியேற்றியிருந்தனர்.
இந்நிலையில் தமது காணிகளை துப்புரவு செய்வதனை எதிர்த்த கடற்படையினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து முறைப்பாட்டாளர்கள் உண்மையில் காணி உரிமையாளர்களா? ஏன உறுதிப்படுத்தி பின்னர் மக்கள் சார்பில் சிவல் வழக்கு ஒன்றிணை தொடரப் போவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் 2 வாரங்களில் 382 குற்றச்சாட்டுக்கள் பதிவு
யாழ்.குடாநாட்டில் 2 வாரங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 382பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதுள்ளனர்.
மேலும் 16வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் பொலிஸார் தெரிவிக்கையில், மானிப்பாய் பகுதியில் 16வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புயை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் 4லட்சத்து 55ஆயிரம் ரூபா பண மோசடி மற்றும் துவிச்சக்கரவண்டி, கைத்தொலைபேசி, மற்றும் காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 382பேர் கடந்த 2 வாரங்களில் யாழ்.மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp0.html

Geen opmerkingen:

Een reactie posten