தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

புதிய மனித உரிமை ஆணையாளர் நாளை கடமையை ஆரம்பிக்க உள்ளார்!

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள் உட்பட 208 பவுண் கொள்ளை - திருமண வீட்டில் திருடர்கள் கைவரிசை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:42.41 AM GMT ]
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் பெருந்தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் நேற்று திருமண வைபவம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள் உட்பட 200 பவுண் நகை களவு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு மோப்ப நாய்களுடன் இன்று காலை வந்த பொலிஸார், விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தென்மராட்சி வதிரிப்பகுதி வீடொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் எட்டு பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தபால் அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது
கொழும்பு கோட்டை தபால் பரிவர்தன பிரிவில் உரிமையாளர்கள் பொறுப்பேற்காத மூன்று பொதிகள் மாற்றப்பட்டமை சம்பந்தமாக 4 அதிகாரிகள் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நேற்று கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தபால் அதிபர், பொதிகள் பிரிவின் பொறுப்பதிகாரி, அலுவலக உதவியாளர், தொழிலாளர் மற்றும் மேலும் நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து கடந்த மே மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பொதிகளை, கடந்த 8 ஆம் திகதி வரை உரிமையாளர்கள் வந்து எடுத்துச் செல்லவில்லை.
இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மூன்று பொதிகளை அதிகாரிகள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் காதிதங்கள் மற்றும் கொங்ரீட் துண்டுகள் போடப்பட்டு பொதி செய்யப்பட்டிருந்தது.
இதனால், இது குறித்து வெளிநாட்டு தபால் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே.எச்.எம். சமரசிங்க கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மத்திய தபால் பரிவர்தன நிலையத்தில் சேவையாற்றிய அதிகாரிகள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு இந்த பொதிகளை மாற்றி வேறு பொதிகளுடன் சேர்த்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
விடயம் தொடர்பாக கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo3.html
புதிய மனித உரிமை ஆணையாளர் நாளை கடமையை ஆரம்பிக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 06:02.56 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் இளவரசர் செய்யத் அல் ஹூசைன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளராக ஆறு வருடங்களாக பணியாற்றிய தென் ஆபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
அவரது வெற்றிடத்திற்கே இளவரசர் அல் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அல் ஹூசைன் ஜோர்தான் அரச வம்சத்தை சேர்ந்தவர் என்பதுடன் ஜெனிவாவுக்கான அந்நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo4.html

Geen opmerkingen:

Een reactie posten