[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 10:17.05 AM GMT ]
ஒக்டோபர் மாதம் கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல்நீரேரியினை ஊடறுத்துச் செல்லும் பாலம் நவீன தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் விரைவில் யாழ். கொழும்பு கோட்டை புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு- கண்டி அதிவேக பாதை புனரமைப்புக்கள் இந்த வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ளன- அரசாங்கம்
வடக்கு அதிவேகப் பாதையின் கொழும்பு –கண்டி பிரிவின் புனரமைப்பு பணிகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை அரசாங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தென் அதிவேகப்பாதையுடன் இணைக்கக்கூடிய வகையில் மத்திய கண்டி மற்றும் வடக்கின் யாழ்ப்பாண நகரையும் இணைக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது.
சீனாவின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த பாதைக்கான நிதி ஒதுக்கீடு 130 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைப்பு, இயக்கம் மற்றும் பரிமாற்றம்(பிஓரி) என்ற அடிப்படையில் அமைக்கப்படவுள்ள இந்த பாதை பெரும்பாலும் விவசாயம் செய்யப்படாத நிலங்களுக்கு ஊடாகவே அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu6.html
13க்கு அப்பால் எதுவும் முடியாது!- இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்துள்ளது!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 10:29.20 AM GMT ]
அப்படியான விரிவான அதிகாரங்களை எந்த வகையிலும் வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும் இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புகள் தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு பரந்துபட்ட அதிகார பரவலாக்கலை பெறுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் விசேட தூதுவர் ஒருவரை நியமிக்குமாறு கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இந்திய பிரதமர் மோடி நிராகரித்துள்ளார் எனவும் திவயின கூறியுள்ளது.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை, வடக்கு பிரதேசத்தை மாத்திரமல்ல, முழு இலங்கையையும் ஆட்சி செய்ய மேற்கொள்ளும் முயற்சி என அரசாங்கம் இந்திய அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்துள்ளது.
பரந்துபட்ட அதிகார பரவலாக்கம் மூலமாக வடக்கில் கனிய வளம், துறைமுகம், காடுகள், மீன்பிடி, உள்நாட்டு நீர் வழிகள், வெளிநாடு நிதியை பெறுதல் உள்ளிட்ட அதிகாரங்கள் பலவற்றை பெறுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் திவயின குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிகாரங்களின் கீழ் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியை பெற்றுக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ள முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
முதலமைச்சர் நிதியம் ஸ்தாபிக்கப்படும் முன்னர், அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 5 மில்லியன் ரூபாவை வடக்கு மாகாண சபைக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரிய வந்துள்ளது எனவும் திவயின தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu7.html
Geen opmerkingen:
Een reactie posten