இலங்கையின் கடலோரத்தை பலப்படுத்த யப்பானின் கப்பல்கள் சூழவுள்ளன ?
[ Aug 25, 2014 05:11:04 AM | வாசித்தோர் : 2570 ]
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்கப்பல்கள் பயணிக்கும் இந்துசமுத்திர கடற்பாதையின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் குறிப்பிட்ட கப்பல்களை வழங்குதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விஜயத்தின் பின்னரே எத்தனை கப்பல்களை வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள ஜப்பானிய அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட கப்பல்களை வழங்குவதா அல்லது பயன்படுத்தப்பட்ட கப்பல்களை வழங்குதா என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் எனவும்தெரிவித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/849.htmlமானிப்பாய் மாணவியுடன் மன்மதலீலை செய்த ஆசிரியரின் விளக்கமறியில் நீடிக்கப்பட்டது !
[ Aug 25, 2014 05:50:42 AM | வாசித்தோர் : 7780 ]
மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியை, தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த 33 வயதுடைய ஆசிரியரை செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். சங்கானை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மானிப்பாய் செல்லமுத்து மைதானப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியார் வகுப்புக்கள் நடத்தி வந்தார். தனியார் வகுப்பிற்கு வரும் உயர்தர வகுப்பு மாணவியொருவரை தனியார் வகுப்பு நடத்தும் வீட்டில் வைத்து மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள், மேற்படி ஆசிரியரை கடந்த 16ஆம் திகதி பிடித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிஸார், மேற்படி ஆசிரியரை கடந்த 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, ஆசிரியரை விளக்கமறியலில் வைத்த நீதவான், மேற்படி தனியார் கல்வி நிலையத்தையும் மூடும்படியும் உத்தரவிட்டார் எனவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/854.html
Geen opmerkingen:
Een reactie posten