கேரளா, தமிழகம் ஊடாக இலங்கைக்குள் வரும் போதைப் பொருட்கள்
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஐ.நாவின் இரண்டு பிரகடனங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை, அதன்படி தொடர்ந்து ஐ.நாவுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைமை இயக்குநர் கே.கமகே தெரிவித்தார்.
இதன்படி, இலங்கைக்குள் வருகின்ற வர்த்தக சரக்கு கொள்கலன்களில் தேடுதல் நடத்தும் சிறப்பு வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்திய - இலங்கை பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளிடையே அண்மையில் புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் டிஐஜி பூஜித் ஜயசுந்தர, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் இயக்குநர் எஸ்எஸ்பி கமல் சில்வா ஆகிய அதிகாரிகள், இந்திய போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைவர்களையும் தென்னிந்தியப் பிராந்தியத் தலைவர்களையும் சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை உடனடியாகப் பரிமாறிக் கொள்வது, கடல்மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்படும்போது அது தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளிடையே ஒத்துழைப்புகளை பரிமாறிக்கொள்வது, கடத்தல்காரர்கள் நாடு விட்டு நாடு தாவும்போது அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளும் உடன்பாடு கண்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிக்கியிருந்தார்.
குறிப்பாக கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பிராந்தியங்கள் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும்போது இருநாட்டு அதிகாரிகளும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலேயே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.
கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தப்படும்போது தென்னிந்திய மாநிலங்கள் ஊடாகவே இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுவதாகக் கூறிய அவர், இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களில் அதிகமானவை பாகிஸ்தானிலிருந்தே வருவதாகவும் கூறினார்.
அதேபோல இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களும் இந்தியா ஊடாகவே வேறுநாடுகளுக்கு சென்று தலைமறைவாகி வருவதாகவும் இலங்கை பொலிஸார் கூறுகின்றனர்.
வேறுநாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களும் வேறு மார்க்கங்களில் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பிவிட்டு இந்தியா ஊடாக இலங்கைக்குள் நுழைந்துவிடுவதாகவும் அஜித் ரோகண சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுடனான புதிய உடன்பாடுகளின் பலனாக, நேற்று சனிக்கிழமை இரவு பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு ஏதுவாக இலங்கை ஒரு இடைப்பட்ட மையமாக செயற்படுவதாகவும் சந்தேகங்கள் இருந்துவருகின்றன.
ஆனால், அப்படியான தகவலை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை என்று இலங்கை பொலிஸார் கூறுகின்றனர்.
லைபீரியாவுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்த பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருளை 6 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeoy.html
ஒபாமா மீண்டும் போட்டியிடுவார்! அமைச்சர் பவித்ராவின் அறியாமை
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 06:23.17 AM GMT ]
கம்பளை நகரில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எமது சிறிய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயற்பட, அவர்களின் விடுதலைப் புலி ஆதரவுப் போக்கே காரணம்.
இலங்கையைப் பிரித்து, தனிநாடொன்றை அமைத்துத் தருவதாக ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் நோக்கிலேயே இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
தற்போது இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனும் ஒபாமாவுடன் சேர்ந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கேமரூன் தனிப்பட்ட முறையில் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் இன்னொரு தடவை தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். அப்போது அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தங்கள் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி நடக்கின்றது. அதற்கு நாம் உடந்தையாகி விடக் கூடாது.
ரணில் இ்ந்நாட்டின் ஜனாதிபதியானால் நாட்டைத் துண்டாடி விடுவார். விடுதலைப் புலிகளின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொடுத்து விடுவார். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றும் அமைச்சர் பவித்ரா தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeoz.html
Geen opmerkingen:
Een reactie posten