தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

இந்தியாவும் இலங்கையும் இறையாண்மையை மதிக்க வேண்டும்: அவுதாஸ் கௌசால்!

ஐ.நா சபையில் மகிந்தவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பழ.நெடுமாறன் கண்டனம்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 03:52.18 AM GMT ]
ஜனாதிபதி ராஜபக்சவுக்கு ஐ.நா விடுத்த அழைப்பினை திரும்பப் பெற அனைத்து தமிழ் அமைப்புகளும் பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு நேற்ற அளித்த நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை நாடாளுமன்ற தமிழ் எம்.பி.கள் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் இன அழிப்பு நடவடிக்கைகளை தடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றபடி அரசியல் தீர்வுக்கு இந்திய அரசு உதவ வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை அமைப் பின் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் இலங்கையில் ஐ.நா. விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
எனினும் ஒக்டோபர் 30-ம் திகதிக்குள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் புகை படங்கள், காட்சிகள் போன்றவற்றை ஈழ தமிழர்கள் லண்டனில் உள்ள ஐ.நா. குழுவுக்கு முறைப்பாடாக தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி அனுப்பலாம்.
ஐ.நா.சபையில் வரும் செப்டம்பர் 25-ம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பேசுவதற்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி மீது போர்க்குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறியுள்ள நிலையில் அவரை ஐ.நாவில் பேச அழைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடி யாது. உடனடியாக அந்த அழைப்பை திரும்ப பெறவேண்டும் என்று ஐ.நா அமைப்பிடம் அனைத்து தமிழ் அமைப்புகளும் பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfx3.html
தமிழ் மக்களின் மனதை வெல்வதே அரசின் நோக்கம்!- 2005ல் மஹிந்தவிற்கு உதவி செய்ய வேண்டாம் என சந்திரிக்கா கோரினார்- டலஸ்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 04:35.22 AM GMT ]
தமிழ் மக்களின் மனதை வெல்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்க அமைச்சின் பிரதியமைச்சராக பீ. திகாம்பரம் அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து தனது அமைச்சுக்கு வருகை தந்த அவரை வரவேற்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எங்களது தேசிய நல்லிணக்க அமைச்சின் மூலமாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
அதற்கான செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க ஏராளம் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
யுத்த முடிவின் பின் நமக்குள் இடைவெளி இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்கு அரசாங்கம் தன்னாலான வழிகளில் முயன்று வருகின்றது.
இது தொடர்பான செய்திகளை தமிழ் மக்கள் மத்தியில் இலகுவாக எடுத்துச் செல்வதற்கு பிரதியமைச்சர் திகாம்பரத்தின் நியமனம் பெரிதும் உறுதுணையாக அமையும்.
எமது அமைச்சுக்கு தமிழர் ஒருவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2005ல் மஹிந்தவிற்கு உதவி செய்ய வேண்டாம் என சந்திரிக்கா கோரினார் – டலஸ் அழகப்பெரும
2005ம் ஆண்டு தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவிற்கு உதவி செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கோரியதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயம் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது.
மஹிந்தவிற்கு ஆதரவளித்து பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என சந்திரிக்கா தொகுதி அமைப்பாளர்களிடம் கோரியிருந்தார்.
கட்சித் தலைவியின் இந்த நடவடிக்கையினால் சுதந்திரக் கட்சி பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது.
சந்திரிக்கா கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார். பணம் இல்லாத காரணத்தினால் 13000 சுவரொட்டிகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. 
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfx4.html
இந்தியாவும் இலங்கையும் இறையாண்மையை மதிக்க வேண்டும்: அவுதாஸ் கௌசால்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 04:49.32 AM GMT ]
இந்தியாவும் இலங்கையும் தத்தமது இறையாண்மையை மதிக்க வேண்டும் என ஜனாதிபதியின் காணாமல் போனோர் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் அவுதாஸ் கௌசால் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியாவும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி வழங்கும் அதேவேளை இலங்கையின் இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கி செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது. எனினும் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ வேண்டும்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் ஏற்பாடுகளை மிகவும் செயற்பாட்டு ரீதியானதாக முன்னெடுக்க இலங்கையை இணக்க செய்யவும் அதனை முன்னெடுத்துச் செல்லவும் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் கௌசால் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfx6.html

Geen opmerkingen:

Een reactie posten