நீதி கிடைக்காத போது எடு!சிறந்த தந்தை இவரே!யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த போது, யுவதியின் தந்தை சந்தேக நபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
புதுக்கடை நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதமன்றம் சந்தேக நபருக்கு பிணை வழங்கியது.
இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த யுவதியின் தந்தை சந்தேக நபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.
இதனையடுத்து அங்கு வீதி போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo2.html
Geen opmerkingen:
Een reactie posten