இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு உயிராபத்து இல்லை என புலனாய்வு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்த மல்லவஆராச்சி இதனை பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் ரோந்து வாகனத்தை பயன்படுத்துவது உட்பட தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் உபுல் ஜயசூரியவின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை தான் முற்றாக ஏற்றுக்கொள்வதாகவும் அனுர சேனாநாயக்க, நீதவான் திலின கமகே முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உபுல் ஜயசூரிய சார்பில் ஆஜரான சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்க வாதங்களை முன்வைத்த போது, கொழும்பில் உள்ள பாதாள உலக தலைவர் ஒருவருக்கு 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விடுலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த குமரன் பத்மநாதனுக்கும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க தீர்மானித்த போது, புலனாய்வு அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதா எனலும் குணரட்ன வன்னிநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo3.html
Geen opmerkingen:
Een reactie posten