[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 06:27.54 AM GMT ]
இந்த சம்பவம் எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தனது மகளின் வீட்டுக்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார்.
பெண்ணின் கணவர் நேற்று மகளது வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் கணவர் மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியை கொலை செய்த கணவர் விஷம் அருந்தியுள்ளதுடன் அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டி, பாணமுர பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo0.html
வீரன் என்பவன் வீழ்ந்து கிடப்பவன் அல்ல: சி.சிறீதரன் எம்.பி
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 07:17.10 AM GMT ]
அமரர் சின்னத்தம்பி மகாலிங்கத்தின் ஞாபகார்த்தமாக சன் றில்லர்ஸ் ஆதரவுடன் உழவர் ஒன்றியமும் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து வடமாகாண உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டியினை நடாத்தியுள்ளன.
உழவர் ஒன்றிய மைதானத்தில் கடந்த 19ம் நாள் தொடக்கம் இப்போட்டிகள் இடம்பெற்றன. உருத்திரபுரம் விளையாட்டுக் கழகமும் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகமும் இறுதிப்போட்டியில் மோதியது.
இறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தொடர்ந்து தற்போது நான்காவது தடவையாக மாவட்டத்தில் சாம்பியனாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரனும், சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேசபை தவிசாளர் குகராஜா, உறுப்பினர் சுவிஸ்கரன், பச்சிலைப்பள்ளி பிரதேசபை உறுப்பினர் சுரேன், அமரர் மகாலிங்கத்தின் பாரியார், மகன் மற்றும் கிராம சேவகர் சிம்சன்போல், சிவநகர் அ.த.க.பாடசாலை அதிபர் ராஜரட்ணம், கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ணா வித்தியாலய அதிபர் திருமதி சூரியகுமாரி இராஜேந்திரம்,
விளையாட்டு உத்தியோகத்தர் குமார், உருத்திரபுரம் மகா வித்தியாலய அதிபர் திருமதி இருதயசிவதாஸ், பரந்தன் அ.த.க.பாடசாலை அதிபர் சந்திரவதனி, சாமிப்புலம் அ.த.க.பாடசாலை அதிபர் நித்தியானந்தன் உட்பட உழவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
நீண்ட நாளைக்கு பின்பு ஒரு தரம்வாய்ந்த உதைபந்தாட்ட போட்டியை பார்க்கும் வாய்ப்பு இங்கு கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் பிரபலமான பாரம்பரியத்தை கொண்ட இரண்டு அணிகள் இன்று களத்தில் நின்றன.
வெற்றி, தோல்வி என்பது இங்கு முக்கியமல்ல. தரமான விளையாட்டு வீரர்களை இங்கு இரண்டு அணிகளிலும் காண கிடைத்ததே முக்கியம். எதிர்காலத்தில் மாவட்ட ரீதியாக தேசிய போட்டிகளில் பங்குபற்றும்போது இது கைகொடுக்கும்.
ஒரு போதும் உண்மையான விளையாட்டு வீரர்கள் கலங்குவதும் இல்லை. தோல்விகளை கண்டு துவண்டுவிடுவதில்லை. மாறாக அதில் அவர்கள் பாடங்களை கற்றுக்கொண்டு பின் சாதிக்கின்றார்கள்.
எமது இனத்துக்கே உரிய மனோபலம் விளையாட்டுத்துறையிலும் கலக்கின்றபோது எமக்கு அது பெருமைகளை கொண்டுசேர்க்கும். உருத்திரபுரம் இத்தோடு தொடர்ந்த நான்காவது தடவையாக மாவட்ட சாம்பியனாக கிண்ணத்தை சுவீகரிப்பதாக அறிகின்றேன்.
மகிழ்ச்சி. ஆனாலும் ஏனைய கழகங்கள் இன்று இறுதிப்போட்டியில் மோதிய வலைப்பாடு ஜெகமீட்பர் அணியும் மிகவும் பலமான என்பது யாவரும் அறிந்த விடயமே என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo1.html
Geen opmerkingen:
Een reactie posten