இந்த பொய்களே இறுதி அழிவுக்கு இட்டுச்சென்றதை இன்றும் உணராமல் புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் இவர்கள் இருக்கும்வரை தமிழன் தலை நிமிரவே முடியாதுது தமிழர்களுக்கான ஒரு சாபம்!எதிரியை,அவன் வீரத்தை மதிப்பவனே உண்மை வீரன்,அப்போ தமிழன்???
ரா என்கிற கிந்திய பயங்கரவாத உளவுத்துறை சூழ்ச்சிகள் செய்து எமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை அழிக்க பலமுறை முயற்சிசெய்தது, எமது மாவீரர்கள் காப்பரனாக நின்று களத்தில் போரிட்டனர். இரண்டாயிரம் சாரம்(லுங்கி)கட்டிய பொடியள் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து தாயகத்தை ஆக்கிரமித்த கிந்திய பயங்கரவாதிகளை எதிர்த்து போர் செய்தனர் நாம் பல தளபதிகளை இழந்தோம்.
கிந்திய பயங்கரவாதமும் பெரும் இழப்பை சந்தித்தது. அப்பொழுது சென்னையில் தங்கி இருந்த கிட்டுஅண்ணாவிடம் கிந்திய பயங்கரவாத உளவுத்துறை பேரம் பேசியது ஒரு மில்லியன் தருகிறோம் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை போராட்டத்தை கை விட்டு தப்பி போக சொல்லுங்கள் என்று உடனும் அதிலேயே மறுத்த தளபதி கிட்டு அவர்கள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை எந்தக்கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று வாதாடினார். விளைவு தமிழீழத்துக்கு நாடு கடத்தப்பட்டார் . யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளின் மூடிகளால்(புலனாய்வு பிரிவு) மணலாற்றில் இருந்த தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.
பின்னர் கிந்திய பயங்கரவாதிகள் புலிகளிடம் தோற்று வெளியேறும்போது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தளபதி கிட்டு அவர்களுக்கு சர்வதேச தளபதியாக பொறுப்பு வழங்கப்படுகிறது. தளபதி பொட்டம்மான் அவர்களுக்கு புலனாய்வு பிரிவு வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு சர்வதேச அழுத்தம் வந்த போதெல்லாம் தளபதி கிட்டு அவர்கள் தன் அனுபவத்தால் அதை எதிர்கொண்டார் வெளியில் இருந்து செயல்பட்ட துரோகிகள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரு முறை சுவிஸ்ட்லாந்தில் மனித உரிமை இயக்கங்கள் சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு தளபதி கிட்டு அவர்கள் சொன்ன பதில் அவர்களை புருவத்தை உயர்த்த செய்தது. நாம் 90 க்கு முதல் ஒரு குழு பின்பு இன்று நாம் ஒரு தேசிய இராணுவம் நாம் என்ன செய்ய வேண்டும். என்பதை நீங்களே சொல்லுங்கள் நாம் அதன்படி நடக்கிறோம் என்றார்.
எங்களுக்கு பயிற்சி தந்த கிந்தியா கூட எமக்கு இந்த மனித உரிமைகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்றார். உடனும் மனித உரிமைகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் குவெக்கார் சமாதான செய்திகளுடன் தாயகம் நோக்கி செல்லும் வழியில் கிந்திய பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டு சரணடைய சொன்ன போது இயக்க விதிகளின் படி தன்னையும் எல்லா ஆவணங்களையும் அளித்து சாவை எதிர் நோக்கி மாவீரர் ஆனார்..
களத்திலோ தளபதி பொட்டம்மான் அவர்கள் துரோகிகளிடமும் எதிரிகளிடமும் இருந்து எமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை காப்பாற்றி பத்திரமாக அழைத்து சென்றார்..
இந்த இரு தூண்களும் தலைவனுடன் நிற்கும் போட்டோவை உங்களுக்காக சமர்பிக்கிறேன்.
வித்தகன்
இந்த இரு தூண்களும் தலைவனுடன் நிற்கும் போட்டோவை உங்களுக்காக சமர்பிக்கிறேன்.
வித்தகன்
தமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். மொழி,இனம் காக்கின்ற தலைவனின் வழி நின்று வாழ்வோம்.
“”தமிழரின் தாகம் தமிழ் தாயகம்””
தொடர்ந்து இணைந்திருங்கள் எமது போராட்ட வரலாற்றையும் போராட்ட அதிசயங்களையும் அறிவதற்கு
“”தமிழரின் தாகம் தமிழ் தாயகம்””
தொடர்ந்து இணைந்திருங்கள் எமது போராட்ட வரலாற்றையும் போராட்ட அதிசயங்களையும் அறிவதற்கு
Geen opmerkingen:
Een reactie posten