[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 01:33.59 PM GMT ]
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட முயற்சித்து வருகிறார்.
அத்துடன் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பெறக் கூடிய வாக்கு எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களுடன் அவர் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற உதவினால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என ரணில் புள்ளிவிபரங்களை முன்வைத்து சம்பந்தனுக்கு விளக்கியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சம்பந்தன், “உங்களால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நீங்கள் போட்டியிட்டால் எங்களால் உதவ முடியாது.
புதிய வேட்பாளரை நிறுத்துங்கள். அப்படி புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய முடியும்” எனக் கூறியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq3.html
யாழில் இடம்பெற்ற தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 01:44.57 PM GMT ]
யாழ்.தமிழ் சங்கம் மற்றும் மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் குறித்த நினைவு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு திருஉருவச் சிலை திறந்து வைக்கப்படும் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
யாழ்.மறைமாவட்ட பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சர்வமத தலைவர்கள், தமிழ் சங்க உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq4.html
இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும்: பிரித்தானியா
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:03.06 PM GMT ]
பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கையின் பிந்திய தகவல்களில் இந்த வி;டயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் சிங்களவர்களுக்கு மத்தியில் நாட்டின் தென்பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றன. இதன்போது பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பௌத்த பிக்குகளும் இணைந்திருந்த இந்த வன்முறையின்போது மூன்று உயிர்களும் காவுக்கொள்ளப்பட்டன.
இரவு வேளைகளில் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டிருந்தபோதும் வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இதன்போது சட்டம் முழுமையாக செயலிழந்துவிட்டதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தமையையும் பிரித்தானிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் அச்சங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அரசாங்க அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
இலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டங்கள் அடக்கப்படுகின்றன.
கடந்த மே-16ம் திகதியன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நான்கு பேர் காயமடைந்து வைத்;தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏப்ரல் 14 ஆம் திகதியன்று யாழ்ப்பாண செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதனையடுத்து அரசாங்க அதிகாரி ஒருவரின் மனைவியின் புகைப்படத்தை பிரசுரித்தமைக்காக செய்தித்தாளின் ஆசிரியர் ஒருவர் விசாரணை செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண செய்தியாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்று அதிகாரிகளின் தலையீட்டினால் இரத்துச் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்துக்கு கண்காணிப்பு பணிகளுக்காக சென்றபோது அச்சுறுத்தப்பட்டனர்.
மே 17ஆம் திகதி 2009 போரினால் மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் நிகழ்வுகளுக்கு படைத்தரப்பினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று பிரித்தானிய மனித உரிமைகள் பிந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq5.html
Geen opmerkingen:
Een reactie posten