[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:08.35 AM GMT ]
காணி பிரச்சினைகளை தீர்க்க அரச அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால் காணி தகராறுகள் கொலைகளில் முடிந்துள்ளன.
காணி பிரச்சினை தொடர்பில் கொலை செய்தவர்கள் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ. பல்லேகம தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 500 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலான கைதிகள் காணி பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்.
இதனைத் தவிர மது போதையில் கொலை செய்தவர்கள், கள்ள தொடர்புகள் காரணமாக கொலை செய்தவர்களும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் அடங்குவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfqy.html
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்!- 4ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:16.01 AM GMT ]
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது.
எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறது.
இப்போது மட்டுமல்ல, முதல்வர் அம்மா அவர்கள், எப்போதெல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பாதுகாக்க போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அதைக் குற்றம் சாட்டுவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக வைத்துள்ளது.
தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
இந்த துணைத் தூதரகத்தை உடனடியாக மூடக் கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் சென்னையில் உள்ள அந்த தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்.
இதில் தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfqz.html
அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்!- ஜனாதிபதியிடம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:17.45 AM GMT ]
அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டு சிறப்புரிமையை அனுபவித்து கட்சியையும் அரசாங்கத்தையும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.
இவர்களின் செயற்பாடுகள் காரணமாக கட்சியினர் தவறாக வழிநடத்தப்படலாம் எனவும் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் இது தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், மத்திய மாகாண அமைச்சர் பந்துல பல்லேகம பகிரங்கமாக சுதந்திரக் கட்சியை விமர்சித்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளதாக அறிய கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மத்திய மாகாண அமைச்சர் பல்லேகம, பகிரங்கமாக சுதந்திரக் கட்சியை விமர்சித்தமை மற்றும் சில அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தியமை தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கண் தெரியவதில்லை எனவும், காது கேட்பதில்லை எனவும் மத்திய மாகாண அமைச்சர் பந்துல பல்லேகம அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq0.html
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்குமாறு சம்பந்தன் அரசிடம் கோரிக்கை: திவயின
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:47.58 AM GMT ]
இதனடிப்படையில் மாவட்டங்களுக்கான அதிகாரங்களையும் அரசாங்கம் பரவலாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்றில் சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதி, போக்குவரத்து, காடுகள், துறைமுகம், விமான சேவைகள் உட்பட 41 அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனைகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கோரியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளதற்காக தமிழ்த் தேசிய பேரவை என்ற அமைப்பை ஆரம்பிக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனிடையே பாதுகாப்பு அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்களை வடக்கு மாகாணத்திற்கு பகிருமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq1.html
Geen opmerkingen:
Een reactie posten