தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி-ஜனாதிபதியின் முட்டாள்தனமான தீர்மானத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்!- சம்பிக்க ரணவக்க

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பு இன்னமும் ஈழக் கனவை கைவிடவில்லை!– ஜீ.எல்.பீரிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 01:20.46 AM GMT ]
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பு இன்னமும் ஈழக் கனவை கைவிடவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கும்புறுபிட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் மற்றும் சூழ்ச்சித் திட்டங்களுக்கு சரியான வெளியுறவுக் கொள்கைகளின் மூலம் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில மேற்குலக நாடுகள் செயற்பட்டு வந்தன.
ஜனாதிபதியின் அனுபவம் மிக்க சிறந்த தலைமைத்துவம் காரணமாக நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எனினும் புலம்பெயர் தமிழ் சமூகம் இன்னமும் ஈழக் கனவுகளை கைவிடவில்லை.
இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
உலகின் பல பாகங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாரியளவில் உயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes0.html
ஜனாதிபதியின் முட்டாள்தனமான தீர்மானத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்!- சம்பிக்க ரணவக்க
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 01:53.33 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முட்டாள் தனமான தீர்மானத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டமை ஓர் முட்டாள்தனமான தீர்மானமாகும்.
இதற்கான பாதக பலன்களை அனுபவிக்க நேரிடும்.
இந்த தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கருத்து கோரப்படவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும்.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes2.html

கொழும்பு புறக்கோட்டையில் மிதக்கும் வர்த்தக சந்தை திறப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:48.33 AM GMT ]
கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தக சந்தை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், கௌரவ விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சிரேஸ்ட அமைச்சர் பௌசி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், துமிந்த சில்வா, கொழும்பு மாநகர முதல்வர் முஸாம்பில் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
வர்த்தகத் தொகுதியினை அதிதிகள் பார்வையிட்டதுடன், மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதுடன் பெயர்ப்பலகையும், நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன், வர்த்தக நடவடிக்கைகளையும் அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த அதேவேளை, வர்த்தகர்களுக்கான உரிமைப் பத்திரங்களையும் வழங்கி வைத்தனர்.
திறந்து வைக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியில் 94 கடைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes6.html
தேனீருக்காக கோப்பியையும் கோப்பிக்காக விஸ்கியையும் கூட்டமைப்பினர் கோருவார்கள்: டக்ளஸ்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 03:23.33 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியமையானது, இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டும் அக்கறையில் அல்லவென இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா,
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தேனீர் வேண்டுமா? என்று கேட்டால் கோப்பி வேண்டும் என்பார்கள். கோப்பி வேண்டுமா? என்று கேட்டால் அவர்கள் விஸ்கி வேண்டும் என்பார்கள்.
அதாவது அவர்கள் தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது. அரசாங்கம் 13வது சரத்தை அமுல்படுத்தினால் அதன்போது கூட்டமைப்பினர் தமது கோரிக்கையை மாற்றிக்கொள்வார்கள் என்று அமைச்சர் எதிர்வுகூறியுள்ளார்.
பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளின் கொள்கையையே பின்பற்றி வருகிறார்கள் என்றும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வடமாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினால் அந்த மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes7.html

யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 03:30.59 AM GMT ]
குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞர் நேற்று மாலை வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் 
காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது.
தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை.
30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார் என்ற இளைஞனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdety.html

Geen opmerkingen:

Een reactie posten