தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

இலங்கையின் நிலை என்ன?- மனித உரிமைகள் அலுவலகத்திடம் வாய்மூல அறிக்கை கோரப்படவுள்ளது!

பக்கச்சார்பற்ற பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது?
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:03.07 AM GMT ]
பக்கச்சார்பற்ற பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடுநிலையான கொள்கைகளை பின்பற்றக் கூடிய பௌத்த பிக்குத் தலைமைத்துவமொன்று நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தினால் புதிதாக ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இலங்கை தேசிய சங்க சபை என இந்த அமைப்பிற்கு பெயரிடப்பட்டுள்ளதாக கண்டி அஸ்கிரி பீட செயற்குழு உறுப்பினர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மாநாயக்க தேரர்கள், பௌத்த பிக்குகள் மற்றும் பீடாதிபதிகள் இந்த அமைப்பில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் நடுநிலையான கொள்கைகளை போதிக்க வேண்டும், பக்கச்சார்பாக செயற்படாது கூடாது ஆகியனவற்றை வலியுறுத்தம் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த அமைப்பின் தலைமைத்துவ பீடத்தில், பொது பல சேனா அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes3.html
ஆந்திர பிரதேசத்தில் 6 இலங்கையர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:36.55 AM GMT ]
வெளிநாட்டுக்கு அனுப்பப்படவிருந்த 6 இலங்கைத் தமிழர்களை ஆந்திர பிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 6 பேரும் விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஆந்திர பிரதேச ஒன்கோல் பகுதியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த இலங்கையர் ஒருவர் உட்பட்ட நான்கு பேரையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
6 இலங்கையர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த நான்கு பேரும் அவர்களிடம் இருந்து 5 இலட்சம் வரை பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் 6பேரும் விசாகப்பட்டிண கரையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes5.html
இலங்கையின் நிலை என்ன?- மனித உரிமைகள் அலுவலகத்திடம் வாய்மூல அறிக்கை கோரப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 03:47.28 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் 25/1 பிரிவின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, மனித உரிமைகள் அலுவலகத்திடம் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நடைமுறை குறித்து வாய்மூல அறிக்கையை கோரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வு செப்டம்பர் ஆம் திகதியன்று ஆரம்பமாகும் நிலையில் இலங்கை தொடர்பில் தற்போதைய நிலவரம் குறித்து வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் அலுவலகத்திடம் கோரும் என்று நிகழ்ச்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்தில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுகிறது.
எனினும் இலங்கைக்குள் வர சர்வதேச குழுவுக்கு இலங்கை அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் குறித்த குழு இலங்கைக்கு வெளியில் இருந்தே தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdetz.html

Geen opmerkingen:

Een reactie posten