[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 12:36.07 AM GMT ]
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது.
இறுதிக்கட்ட போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக காணப்பட்டது.
எனினும், பொதுமக்கள் உயிரிழப்பு;ககள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றிற்கோ அல்லது கூட்டணி கட்சிகளுக்கோ அறிவிக்காது ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் அதற்கு ஆலோசனை வழங்கும் வெளிநாட்டு நிபுணர் குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
வடக்கு மக்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறையிருந்தால் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்.
அரசாங்கம் சர்வதேச விசாரணைகளில் பங்கேற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லையென்றால் அதனை நிரூபிக்க முடியும்.
மாறாக ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளை வெறுமனே விமர்சனம் செய்வதில் அர்த்தமில்லை.
இவ்வாறு நடந்து கொள்வதனால் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் உயர்வடையும்.
அரசாங்கம் இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமை வருத்தமளிக்கின்றது.
இறுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அரசாங்கத்தையே பாதிக்கும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLder7.html
ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது மஹிந்தவை தோற்கடிக்கும் முயற்சியை பலவீனப்படுத்தும்!- ஜே.வி.பி.
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 12:45.16 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்துகின்றது என்பது பற்றி எமக்கு எவ்வித கவலையும் கிடையாது.
ரணில் போட்டியிடுகின்றாரா இல்லையா என்பதனை கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியே தீhமானிக்க வேண்டும்.
எனினும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிரான பொது வேட்பாளர் என்ற சவாலை வெற்றி கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படக் கூடும்.
ஜனாதிபதி தேர்தல் பற்றி பதற்றமடைய வேண்டியதில்லை. இன்னமும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமித்தமை அரசியல் நோக்கத்துடனேயே தவிர, விளையாட்டாக அல்ல என சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdesy.html
அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!– விதுர விக்ரமநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 12:59.01 AM GMT ]
இரண்டு பிரதியமைச்சர்கள் புதியதாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போன்ற சிறிய நாடொன்று பாரியளவிலான அமைச்சரவையை பராமரிப்பது சிக்கல் நிலைமையை உருவாக்கும்.
நாட்டில் தற்போதைக்கு அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள், சிரேஸ்ட அமைச்சர்கள் என 106 அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வளவு பெரிய ஓர் அமைச்சரவை நாட்டுக்கு சுமை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
எண்ணிக்கையில் குறைந்த அதிகாரங்களில் கூடிய அமைச்சரவை ஒன்றை அமைப்பதன் மூலம் நாட்டுக்கு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும்.
இந்த நாட்டுக்கு நன்மை ஏற்பட்டால் வீட்டுக்கு வீடு அமைச்சர்கள் உருவாகினாலும் நான் சந்தோசப்படுவேன், எனினும் நடைமுறையில் இதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது.
30க்கும் குறைந்த செயற்திறன் மிக்க அமைச்சர்களைக் கொண்டு சிறந்த முறையில் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
அமைச்சர்களுக்கு மேலதிகமாக மாகாணசபை முதலமைச்சர்களும் அமைச்சர்களும் கடமையாற்றி வருகின்றனர்.
அதிகளவானவர்களை பதவியில் அமர்த்துவதன் மூலம் சுலபமாக செய்யக் கூடிய பணிகள் கூட கடினமாகிவிடும்.
கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை திருப்தி படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக சிலர் முறைப்பாடு செய்வது தமது காதுகளுக்கும் எட்டியுள்ளது என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdesz.html
30 மாதங்களில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 01:49.06 AM GMT ]
தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ள அதிகாரிகள் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாணசபை பிரதான செயலாளர்கள் மற்றும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாணசபை, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தகவல்களை கோரியுள்ளார்.
தகவல்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தகவல்களை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes1.html
பக்கச்சார்பற்ற பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது?
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:03.07 AM GMT ]
நடுநிலையான கொள்கைகளை பின்பற்றக் கூடிய பௌத்த பிக்குத் தலைமைத்துவமொன்று நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தினால் புதிதாக ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இலங்கை தேசிய சங்க சபை என இந்த அமைப்பிற்கு பெயரிடப்பட்டுள்ளதாக கண்டி அஸ்கிரி பீட செயற்குழு உறுப்பினர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மாநாயக்க தேரர்கள், பௌத்த பிக்குகள் மற்றும் பீடாதிபதிகள் இந்த அமைப்பில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் நடுநிலையான கொள்கைகளை போதிக்க வேண்டும், பக்கச்சார்பாக செயற்படாது கூடாது ஆகியனவற்றை வலியுறுத்தம் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த அமைப்பின் தலைமைத்துவ பீடத்தில், பொது பல சேனா அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes3.html
தனியான நிலமா? அரசியல் தீர்வை தீர்மானிக்க வேண்டியது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்: பிரித்தானிய தமிழர் பேரவை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:19.27 AM GMT ]
அமைப்பின் மனித உரிமைகள் இணைப்பாளர் கானா நிர்மலன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கு எந்த தீர்வை தேவை என்று தீhமானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த இந்திய பிரதமர் மோடியிடம் அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் தமது அமைப்பும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பாரிய பங்கை கோருகிறது என்று நிர்மலன் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்ததாக கூறப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்தி வருகிறது.
எனினும் தமிழகத்தில் உள்ள சில பிரிவினரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உள்ள சில பிரிவினரும் தனியான ஈழத்தை கோருகின்றனர்.
இந்தநிலையில் இந்தியா, நான்கு பிரிவினரின் சமாதான முனைப்பை கருத்திற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் நாடு என்ற நான்கு பிரிவினரின் கருத்துக்களை இந்தியா கருத்திற்கொள்ள வேண்டும் என்று நிர்மலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அரசாங்கத்துக்கு எதிரான ஆவணங்களை சேகரித்துள்ளதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdes4.html
Geen opmerkingen:
Een reactie posten