தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

பெண்கள் பாடசாலைகளுக்குள் நாமல் ராஜபக்ஷ? அதிர்ச்சியூட்டும் தகவல் (மேலும் செய்தித் துளிகள்)

மிஹின் லங்கா நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்- உட்கட்சி பூசலை தீர்க்க நேரடியாக தலையிடும் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:54.49 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட அரச நிறுவனமான மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நஷ்டம் 2 ஆயிரத்து 866 மில்லியன் ரூபா எனவும் அது 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரத்து 956 மில்லியன் ரூபாக குறைந்தது என நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தகவல்களுக்கு அமைய மிஹின் லங்கா நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் ஆயிரத்து 968 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதுடன் அது 2013 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 284 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள நஷ்டத்தை விட அதிகளவான நஷ்டத்தை அந்த நிறுவனம் எதிர்நோக்கியிருப்பதை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழு கண்டறிந்துள்ளது.
 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மிஹின் லங்கா நிறுவனத்திற்கு ஜனாதிபதி வரி விலக்கும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உட்கட்சி பூசலை தீர்க்க நேரடியாக தலையிடும் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக தலையிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
சிரேஷ்ட அமைச்சர்களை கொண்ட குழு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்காததால் இந்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில், பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளன.
முதலில் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv5.html
புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 10:21.25 AM GMT ]
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள் பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சில நாடுகளின் தூதுவர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையால் எந்த தரப்பாவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பூரண சுதந்திரமும் சந்தர்ப்பமும் உள்ளது.
முப்பது வருட பாரிய யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்துள்ள சந்தர்ப்பத்தல் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது அத்தியவசியமானது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை தேடிப்பார்ப்பது மிகவும் அவசியமானது.
முக்கியமாக இவ்வாறான அமைப்புகள் இன அடிப்ப்படையில் நபர்களை தெரிவு செய்து வாக்குரிமையை பயன்படுத்துவது மாத்திரமல்லாது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்துள்ளதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv6.html
பெண்கள் பாடசாலைகளுக்குள் நாமல் ராஜபக்ஷ? அதிர்ச்சியூட்டும் தகவல் (மேலும் செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 06:31.26 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு வேலைத்திட்டங்களை பயன்படுத்தியும், அதிகார பலத்தை கொண்டும் முன்னணி பெண்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் காரணம் வெளிவந்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் இந்த வேலைத்திட்டம் குறித்து ஆசிரியர்களும் பெற்றோரும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனரின் புதல்வியை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு, பின்னர் அந்த யுவதிகளை கைவிட்ட நிலையில், பெண்கள் பாடசாலைகளுக்குள் செல்வதில் நோக்கங்கள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா கல்லூரிக்குள் நேற்று சிங்கள பாடகர் ஒருவருடன் திடீரென சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மாணவிகளுடன் நடனமாட முயற்சித்தமை இந்த சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளதாக ஜே.வி.பியின் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மற்றுமொரு பிரபல பெண்கள் பாடசாலையான விஸாகா கல்லூரிக்கும் நாமல், குறித்த சிங்கள பாடகருடன் சென்றிருந்தாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பாடசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த மாணவன் பரிபாப மரணம்
புத்தளம் மாவட்டம் உடக்கு -  மதுரங்குளி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
கனமுல முஸ்லிம் பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கனமுல முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த சம்சுதீன் சியான் என்ற மாணவனே சம்பவத்தில் இறந்துள்ளார்.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாடசாலைக்கு எதிரில் உள்ள வீதி அடையாள சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்த மாணவன் மோட்டார் சைக்களில் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார்.
ஆயுதம் ஏந்தாத ஒரே கிளர்ச்சியாளர்கள் நாமே: தினேஸ் குணவர்தன
ஆயுதம் ஏந்தாத ஒரே கிளர்ச்சியாளர்கள் நாமே என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் 21வது பொதுக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்கக் கிட்டியமை மகிழ்ச்சியளிக்கின்றது.
வெளிநாடுகளிலிருந்தே பயங்கரவாதம் போதிக்கப்பட்டது.
வெளிநாட்டு அழுத்தங்கள் இன்று வெற்றி கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgu0.html

Geen opmerkingen:

Een reactie posten