தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ் மீது தாக்குதல்!

அரசியல் அமைப்பின் குறைகளை போக்க சட்ட ஆவணம் தயாரிக்கப்படுகிறது: முன்னாள் பிரதம நீதியரசர்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 05:34.07 AM GMT ]
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பில் காணப்படும் சகல குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான யோசனைகள் அடங்கிய புதிய சட்ட ஆவணம் ஒன்றை தயார் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் மற்றும் 12 சட்ட வல்லுநர்களை கொண்ட குழு, இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது உள்ளிட்ட பல திருத்தங்கள் தொடர்பாக நிபுணர்கள் குழு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியை தவிர ஏனைய சகல அரசியல் கட்சிகளும் இந்த ஆவணத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgt5.html
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் சாராயக்கடை அமைக்க திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 05:39.56 AM GMT ]
கிளிநொச்சி மத்திய கல்லாரியின் பின்புற எல்லைக்கு அருகாமையில் டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில் இதுவரை சுற்றுலா விடுதியாக இயங்கிவந்ததை சாராயக்கடையாக மாற்ற வேலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து அதில் கட்டடிடங்கள் வீடுகள் கட்டி பள்ளி நிலத்தை அபகரித்துள்ளவர்களில் ஒருவரின் காணியிலேயே இந்த சாராயக்கடைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரி விடுதியில் வறுமைக்குட்பப்பட்ட, மற்றும் பெற்றோர்களை இழந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தங்கிப்படித்துவரும் நிலையில் அதற்கு அருகில் ஒரு சாராயக்கடை அனுமதிக்க முடியாத சமுகத்துரோகம் என மக்களும் கிராம மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் மாணவர் சமூகம் மற்றும் பெண்கள் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கனகபுரம் பாடசாலைக்கு அருகில் உதயநகருக்கு செல்லும் வீதியிலும் ஒரு சாராயக்கடை இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சாராயக்கடை அரச பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அனுசரணையுடன் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகிலும் ஒரு சாராயக்கடையா என மக்கள் ஆச்சரியமும் விசனமும் அடைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgt6.html
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ் மீது தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 06:00.46 AM GMT ]
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பயணிகள் பஸ்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரை கைது செய்வதற்காக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 4வது மைல் கல் பகுதியில் நேற்றிரவு 10.15 அளவில் இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா டிப்போவுக்கு சொந்தமான பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு பேர் பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பஸ்ஸின் சாரதியான வேப்பங்குளம் - மன்னார் வீதியை சேர்ந்த திருமணி திருச்செல்வம் புத்தளம் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம், யார் தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.
புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcguy.html

Geen opmerkingen:

Een reactie posten