அமெரிக்கா மீது கடுப்பான இலங்கை…
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் நிதி உதவியுடன் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு மட்டும் பயிற்சிகள் வழங்கப்படுவதன் உள்நோக்கம் என்ன?
சிறிலங்காவில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டி உள்ள அமெரிக்கத் தூதரகம் அவ்வாறான சம்பவங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள், சிறிலங்கா அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய வேளை, சிறிலங்காஅரசாங்கம் அளித்த பதிலை அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.
ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கைவிடப்பட்டதற்கு காரணம் அதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என அமெரிக்கத் தூதரகம் கருதுவது போல தென்படுகிறது. அமெரிக்கத் தூதரகம் அதனைக் கண்டித்தும் உள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கும், ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்குமான உரிமையை இந்த விடயத்தில் அமெரிக்கத் தூதரகம் பொருத்தமற்ற விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
அதே அறிக்கையில் இந்த விடயங்களை வேறொரு இடத்தில் சுட்டிக்காட்டும் அமெரிகக் தூதரகம், சிறிலங்காவில் இந்தக் கொள்கைகள் மீறப்படுகின்றன எனவும் தெரிவிக்கிறது.
சிறிலங்கா தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் அமெரிக்க தூதரகம் மிகவும் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் செயற்படுவதாகத் தோன்றுகிறது.
நாடு உணர்ச்சிபூர்வமான, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கையில் ஓர் இனக்குழுவை அல்லது பிரதேசத்தை மாத்திரம் இலக்குவைத்து அமெரிக்கா செயற்படுவது நம்பிக்கையீனத்தை உருவாக்கி தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கலாம் என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78084.html
வாக்களிக்கும் போது நிகாபுக்கு தடை: மஹிந்த உறுதி
ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட கூட்டம், தேர்தல்கள் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் நான் கலந்துகொண்டு வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தைமூடி வருவது தொடர்பாகவும், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் எடுக்கும் படத்தில், காதுகளை மூடும் வண்ணம் நிகாப் அணிவதும் பிரச்சினைக்குரியதாகும் என்று சுட்டிக்காட்டினேன்.
அதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், வாக்குச் சாவடிக்கு வருகின்ற எந்தவொரு முஸ்லிம் பெண்ணோ வேறு எவரோ முகத்தை மறைத்து வர முடியாது. அதற்கு எந்தவொரு முறையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நிகாப் மற்றும் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க முடியாது எனவும் தெளிவுறுத்தியதுடன் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது காதுகளை மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதற்கேற்ப, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும்போது முகத்தை முழுமையாகவோ குறைவாகவோ மறைக்க முடியாது என்பதுடன் அடையாள அட்டையில் காதுகள் மறைக்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர், கட்சி செயலாளர்களிடம் தெளிவுபடுத்தினார் என்றும் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
பத்தரணில்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டபோது,
முகத்தை மூடிக்கொண்டு வாக்களிக்க முடியாது என்பது புதிய சட்டமல்ல. இவ்வாறானதொரு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த கூற்று, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/78091.html
Geen opmerkingen:
Een reactie posten