தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

மகிந்தவை நெருங்கி வரத் துடித்த நபர்: பலிக்காத வசிய யாகம்!

ஒபாமாவை நெருங்க பல மில்லியன் டொலர் செலவு: இலங்கைக்கு மீண்டும் தலையிடி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 11:36.29 AM GMT ]
அமெரிக்கா அரசாங்கம் மற்றும் அதன் ஜனாதிபதி பராக் ஒபாமாவை நெருங்கிச் செல்வது போன்ற காரணங்களை முன்வைத்து இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் விசாரணையை நடத்த அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கடந்த சில வாரங்களாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இதன்படி இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் 600 மில்லியன் டொலர்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய அதிகாரியும் பாகிஸ்தானிய வம்சாவளியுமான இமாட் சுப்ரி என்பவரே தொடர்பாளராக செயற்பட்டுள்ளார்.
அவரின் ஆலோசனையின்படி இலங்கை, அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்று இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் இதன்போது சஜின் வாஸ் குணவர்த்தன குறித்த உடன்படிக்கைகளை செய்யும் போது வழங்கிய இலங்கையின் முகவரி பொய்யான முகவரி என்று தெரியவந்துள்ளது.
ஒன்பதின் கீழ் இரண்டு டட்லி சேனாநாயக்க வீதி கொழும்பு 8. என்ற முகவரியை வழங்கியே சஜின் வாஸ் குணவர்த்தன குறித்த உடன்படிக்கைகளை செய்துள்ளார்.
குறித்த முகவரியில் தற்போது கொரியன் இன்டர்நெசனல் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது இந்த நிறுவனம் குறித்த இடத்தில் அமைக்கப்படுவதற்கு முன்னர் அந்த கட்டிடத்தில் சஜின்வாஸ் குணவர்த்தனவின் நண்பரின் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்று இயங்கிவந்தது.
இந்தநிலையில் அண்மைகாலம் வரையில் சஜின்வாஸ் குணவர்த்தன குறித்த முகவரியை அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு வழங்கி உடன்படிக்கையை செய்துள்ளமை அமெரிக்க வெளியுறவு நிறுவன சட்டத்துக்கு அமைய குற்றமாகும்.
அவ்வாறான குற்றங்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
இந்தநிலையில் குறித்த தகவல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் சிறந்த உறவு உள்ளது- பிரசாத் காரியவசம்
அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் சிறந்த நல்லுறவை பேணி வருவதாக அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்கா கடுமையாக போக்கை காட்டி வருகிறது.
இதனை சரி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன அமெரிக்காவின் பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்தி அமெரிக்க அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையிலேயே பிரசாத் காரியவசத்தின் கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் சிறந்த உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் வேறு பலத் தரப்புக்களுடனும் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfvy.html
மகிந்தவை நெருங்கி வரத் துடித்த நபர்: பலிக்காத வசிய யாகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:43.31 PM GMT ]
பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளர் சுதத் சில்வா, ஜனாதிபதியிடம் மீண்டும் நெருங்கி வர அண்மையில் மேற்கொண்ட யாகம் காரணமாக ஜனாதிபதி திடீரென சுகவீனமுற்றுள்ளதாக ஜனாதிபதியின் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதத் சில்வா மேற்கொண்ட மோசடிகள் பற்றி மாற்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜனாதிபதி, அவரை ஒதுக்கி வைத்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் சந்திப்பு விளக்கமளிக்க பல முறை முயற்சித்த போதிலும் ஜனாதிபதி, சுதத் சில்வாவை சந்திக்கவில்லை.
இதனையடுத்து வேறு நபர்கள் மூலம் தெளிவுப்படுத்த முயற்சித்த போது, சுதத் சில்வாவுக்காக தன்னிடம் வரவேண்டாம் எனவும் அவரை பற்றி தனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் சுதத் சில்வா போன்றவர்களை தான் முழுமையாக நம்பாவிட்டாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுவதை நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தன்னை வைத்து வியாபாரம் செய்வதாகவும் பிரசன்ன ஹென்நாயக்கவிற்கு ( ஜனாதிபதியின் முன்னாள் படப்பிடிப்பாளர்) நடந்ததே, சுதத் சில்வாவுக்கும் நடக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பதிலால், பீதியடைந்துள்ள சுதத் சில்வா, நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபலமான மந்திரவாதியை மூலம் ஜனாதிபதியை மீண்டும் வசியப்படுத்தும் நோக்கில் பெருந் தொகை பணத்தை செலவு செய்து, யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த யாகம் நடத்தப்பட்டு ஓரிரு தினங்களில், ஆரோக்கியமாக இருந்த ஜனாதிபதி திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
சுதத் சில்வாவின் யாகம் காரணமாகவே ஜனாதிபதிக்கு இந்த திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக சுதத்தின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் நீர்கொழும்புக்கு சென்ற சுதத் சில்வா, ஜனாதிபதிக்கு நலன் வேண்டி நேற்று யாகம் ஒன்றை நடத்தியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv0.html

Geen opmerkingen:

Een reactie posten