கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலைக்கு திக்கம் மத்தி சனசமூக நிலையம் குடிநீர் வசதிக்கு உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 02:12.02 PM GMT ]
திக்கம் மத்தி சனசமூக நிலையத்தின் சுவிஸ் கிளை சுவிஸ் சுமன்சேவ் அமைப்பின் நிதியுதவியை கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளின் பல்வேறு தேவைகளுக்கு வழங்கிவரும் நிலையில், அண்மையில் ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் குடிநீருக்கான குழாய்கள் அமைக்கும் பணிக்காக உதவிகளை வழங்கியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் செய்திருந்தார்.
பாடசாலை அதிபர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திக்கம் மத்திய சனசமூக நிலையத்தின் சுவிஸ் கிளை தலைவர் ரி.கே.ஆனந்தராஜா சுவிஸ் சுமன்சேவ் நிறுவனத்தின் கருணை உள்ளங்கள் திக்கம் மத்தி சனசமூக நிலையத்தின் தலைவர் சுதேஸ், உறுப்பினர்களான திக்கம் தினேஸ், நிதர்சன், வாகீசன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன், இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv1.html
பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான இராணுவ பயிற்சிகள் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 03:09.16 PM GMT ]
இந்த பயிற்சிகள் நாட்டின் 22 இராணுவ முகாம்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. இதில் மொத்தமாக 23, 300 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவது காலப் பயிற்சி 7ஆம் திகதி ஆரம்பித்து 27ஆம் திகதி வரைக்கும், இரண்டாம் கால பயிற்சி ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பித்து 24ஆம் திகதி வரைக்கும், மூன்றாம் கால பயிற்சி ஒக்டோபர் 30முதல் 19 வரைக்கும் நடத்தப்படவுள்ளன.
2010ஆம் ஆண்டு முதல் இந்த பயிற்சிகள் 5ஆம் முறையாக நடத்தப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv2.html
Geen opmerkingen:
Een reactie posten