தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

டக்ளசின் யோகேஸ்வரி வீட்டில் மகிந்தரின் ஆட்கள்

புலிகளின் 50 கோடி பணத்தில் விளையாடும் கோத்தா

இவை யாவும் அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட சொத்து மதிப்பை அதிகரிக்கவே உதவின. இவற்றின் மதிப்பு ஐம்பதினாயிரம் கோடிகளையும் தாண்டும் என்பதாக கூறப்பட்டது. இவ்வாறாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஆரம்பத்தில் இலங்கையில் செயற்பட்ட அப்பலோ ஹொஸ்பிட்டல் நிறுவனத்தை கோத்தபாய விலைக்கு வாங்கினார். அதனை லங்கா ஹொஸ்பிட்டல் என்று பெயர் மாற்றி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் அது தனது சொந்த நிறுவனம் இல்லை என்று மறுத்த அவர், தற்போது மறைமுகமான வார்த்தைகளில் ஒத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே தனியார் மயப்படுத்தப்பட்ட இலங்கையின் பாரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனமும் தற்போது கோத்தாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அவரது நெருங்கிய நண்பரான டுபாயில் வசிக்கும் நந்தன லொகுவித்தானவின் பெயரில் இந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அலுவல்கள், நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகள் மூலமான அதிக வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கோத்தபாய வாரம் இருதடவை உருக்குக் கூட்டுத்தாபன வளாகத்துக்குச் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே உலகப் புகழ்பெற்ற டுபாயின் மெரியட் ஹோட்டல் நிறுவனமும் தற்போது புலிகளின் பணத்தைக் கொண்டு கோத்தபாயவின் கைகளுக்கு வந்துவிட்டது. முன்னூறு மில்லியன் டொலர்கள் செலவில் இந்த நிறுவனம் அண்மையில் வாங்கப்பட்டுள்ளது. இதுவும் டுபாயில் இருக்கும் நந்தன லொகுவித்தானவின் பெயரில் வாங்கப்பட்டாலும், கோத்தபாயவின் சொத்து என்பது பகிரங்க இரகசியமாக உள்ளது. அண்மையில் இந்த ஹோட்டலை பார்வையிட இலங்கையிலிருந்து சுமார் 30 ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹோட்டல் தொடர்பான பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பன தொடர்பிலான ஆலோசனைகளை கோத்தபாயவே நேரடியாக வழங்கியிருந்தார்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் சட்ட நிறுவனமொன்றில் கம்பியூட்டர் இயக்குனராக தொழில் செய்தவர். சாதாரண தர வீடொன்றில் வசித்தவர். இன்றைக்கு சர்வதேச ரீதியாக அவர் பெரும் வர்த்தக நிறுவனங்களை வளைத்துப் போடுவதற்கு தமிழ் மக்களின் வியர்வை சிந்தி உழைக்கப்பட்ட பணமே பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தளவு பெருந்தொகைப் பணத்தை இலகுவாக அவர் உழைத்துக் கொள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கே.பி. ஒத்தாசையாக இருந்துள்ளார். அதற்கு நன்றிக் கடனாக டுபாயின் மெரியட் ஹோட்டலின் மறைவான பகுதியில் கே.பி.க்கு விருப்பமான முறையில் சிலையொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல்களை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80218.html

நாமலுக்கும் கோத்தாவுக்கும் சண்டை…

இதனால் காலி கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் குப்பை கூழங்களை அகற்ற காலி மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குப்பைகளை அகற்றுவது வைத்தியசாலையின் வேலை அல்ல என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் வைத்தியசாலை முன்பாகவுள்ள குப்பை கூழங்களை அகற்றுவது மாநகர சபையின் வேலை அல்ல என்றும் அந்த வைத்தியசாலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுவதாகவும் காலி மாநகர சபை மேயர் மெத்சிறி டி சில்வா கூறினார்.
குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒரு பில்லியன் ரூபாவை மாநகர சபை செலுத்துவதாகவும் அதனால் அரசாங்க நிறுவனங்களின் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை அந்த தனியார் நிறுவனம் செய்வது இல்லை எனவும் பொதுமக்களின் குப்பைகளை மாத்திரமே அந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் மேயர் தெரிவித்தார்.
ஆனால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பொதுமக்கள் வீசுகின்ற குப்பை கூழங்களை வைத்தியசாலை அகற்ற முடியாது என்றும் அது காலி மாநகர சபையின் வேலை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மாநகர சபைதான் அந்தக் குப்பைகளை அகற்றியது எனவும் கடந்த ஒரு மாதமாக அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
குப்பைகள் பெருகி துர்நாற்றம் வீசுவதாகவும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கூறிய பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலையின் நோயாளர் பிரிவை மூடவுள்ளவுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையானால் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடச்  செல்லும் பொதுமக்கள் வீசுகின்ற குப்பைகளே அகற்றப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்களின் வாக்குகளில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் கூறிய பணிப்பாளர் வைத்தியசாலையின் கழிவுகள் எரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தான் தொடர்பு கொள்ளப் போவதில்லை என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளாருக்கு அறிவித்து குப்பை கூழங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மேயர் மெத்தசிறி டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/80221.html

டக்ளசின் யோகேஸ்வரி வீட்டில் மகிந்தரின் ஆட்கள்

குறித்த காணியினை கொள்வனவு செய்வதற்கான வருமான வருகையினை தெளிவுபடுத்த கோரியே அவர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சாதாரண பாடசாலை ஆசிரியையாக இருந்திருந்த அவரிடம் குறித்த ஒரு சில ஆண்டுகளில் எவ்வாறு வருமானம் ஈட்டிக்கொண்டார் என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பெருமளவிலான காணிகளை அவர் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் அவரது முன்னாள் சகபாடியும்  மாநகரசபை உறுப்பினராக இருந்து வெளியேற்றப்பட்டவரும் தற்போது அவருடன் முரண்பட்டு செயற்பட்டுவருபவருமான விஜயகாந்த் தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
இதனிடையே மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வடமாகாணசபை முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதிபதியொருவரை நியமித்திருந்தார். இந்த நியமனத்தின் போது முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சி.வீ.கே சிவஞானத்தின் காலத்திலும் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக யோகேஸ்வரி குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80240.html

Geen opmerkingen:

Een reactie posten