[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 04:51.20 PM GMT ]
பொதுத் தேவைகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை சுவீகரித்தனர்.
எனினும் இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அவர்கள் கூறிய காரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இயக்கத்தின் மனித உரிமைகள் வேலைத்திட்டம், பல்வேறு செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சமாதானத்துக்கும், நீதிக்குமான இயக்கம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட காணிகளில் 30 சதவீதமானவை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணங்கள் எவையும் தெரியவில்லை.
மேலும் விடுமுறை விடுதிகள் போன்ற ஆடம்பர தேவைகளுக்காகவும் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்மதிப் படங்கள் உறுதி செய்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq4.html
மஹிந்தவின் அமெரிக்க பயணம்! தமிழர்களுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு!
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:29.29 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீர் நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சைக்காக நேற்று திடீரென அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாழும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்சவும் இந்தக் குழுவுடன் பயணித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண விமானமொன்றில் கடைசி நேரத்தில் ஜனாதிபதியின் குழுவினர் சடுதியாக ஏறியுள்ளனர்.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதியுடன் மருத்துவர்கள் குழுவொன்றும் விமானத்தில் ஏறியுள்ளது. எனினும் அவர் எங்கு செல்கின்றார் என்பது விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே ஜனாதிபதி பயணித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த நான்கு தமிழர்களின் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் வேறு விமானங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் வரை அவர்கள் விமான நிலையத்தில் இக்கட்டான நிலையில் தவிக்க நேர்ந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பாதுகாப்பை முன்னிறுத்தியே தமிழ்ப் பயணிகளின் முன்பதிவை ரத்து்ச செய்யுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்தே தமிழ்ப் பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இனரீதியிலான வேறுபாடுகள் இல்லையென்றும், தமிழர்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடிக்கடி ஜனாதிபதி வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால் அவர் பயணம் செய்யும் விமானத்தில் கூட தமிழ்ப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தரப்பின் இனவாத சிந்தனைப் போக்கு மாறவில்லை என்பதைக் காட்டுவதாக தமிழ்ப் பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq7.html
Geen opmerkingen:
Een reactie posten