தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

பெறுமதிமிக்க காணிகளில் கைவைக்கும் கோத்தபாய! சுளையாக கிடைக்கும் இலாபம்!



ஜனவரியில் இந்திய பிரதமர் இலங்கை பயணம்? தமிழர்களுக்கு சமவுரிமை, மோடி
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 10:26.31 PM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக இலங்கை ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்திய பிரதமரின் வருகை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் அவர் கண்டிப்பாக இலங்கை வர வேண்டும்.
சீன, ஐப்பான் தலைவர்களும் இலங்கை வர இருக்கிறார்கள்.
இலங்கை வருமாறு இந்திய பிரதமருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளேன். நவம்பரில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கும்போது அவருக்கு அழைப்பு விடுப்பேன்.
இது விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்க் கருத்துகளை நான் கண்டுகொள்ளப்போவதில்லை. அங்கு பலர் அரசியல் ஆதாயத்துக்காக செயல்படுகின்றனர் என்றார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை, சுயமரியாதையுடன் தீர்வு அவசியம்!- இந்திய பிரதமர் வலியுறுத்து
இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினரின் சமவுரிமை, இறைமை மற்றும் சுயமரியாதை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது மோடி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை, நீதி மற்றும் சுயமரியாதை என்ற அடிப்படையில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்திய பிரதமர் இதன் போது கோரியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் அரசியல் தீர்வை காண முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் ஆதரவுடன் 1987ம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்புக்குள் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையின் வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என்று மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், இந்தியாவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் விஜயம் இலங்கையின் ஏனைய கட்சிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் ஒரு அங்கமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! கூட்டமைப்பினரிடம் மோடி வலியுறுத்தல் 
ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சினையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டில்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் எடுத்துக் கூறினர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும்.
இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடு கட்டுதல், மருத்துவமனைகள் அமைத்தல், உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடனிருந்தனர். 
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq6.html
மஹிந்தவின் அமெரிக்க பயணம்! தமிழர்களுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு!
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:29.29 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குப் பயணித்த விமானத்தில் முன் பதிவு செய்திருந்த தமிழர்களுக்கு விமானப் பயணம் மறுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீர் நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சைக்காக நேற்று திடீரென அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாழும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்சவும் இந்தக் குழுவுடன் பயணித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண விமானமொன்றில் கடைசி நேரத்தில் ஜனாதிபதியின் குழுவினர் சடுதியாக ஏறியுள்ளனர்.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதியுடன் மருத்துவர்கள் குழுவொன்றும் விமானத்தில் ஏறியுள்ளது. எனினும் அவர் எங்கு செல்கின்றார் என்பது விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே ஜனாதிபதி பயணித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த நான்கு தமிழர்களின் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் வேறு விமானங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் வரை அவர்கள் விமான நிலையத்தில் இக்கட்டான நிலையில் தவிக்க நேர்ந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பாதுகாப்பை முன்னிறுத்தியே தமிழ்ப் பயணிகளின் முன்பதிவை ரத்து்ச செய்யுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்தே தமிழ்ப் பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இனரீதியிலான வேறுபாடுகள் இல்லையென்றும், தமிழர்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடிக்கடி ஜனாதிபதி வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால் அவர் பயணம் செய்யும் விமானத்தில் கூட தமிழ்ப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தரப்பின் இனவாத சிந்தனைப் போக்கு மாறவில்லை என்பதைக் காட்டுவதாக தமிழ்ப் பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq7.html
மாபெரும் இறுதிப் போட்டியாக ஜனாதிபதித் தேர்தல்! ரணில் சூளுரை!
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:34.21 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டியாக அமையும் என்று ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியான ஜாதிக யொவுன் பெரமுனவின் கொழும்பு கிளை சார்பில் விளையாட்டுப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.தே. க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அதனைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் இளைஞர்களின் பங்களிப்பின் மூலமாகத் தான் நிகழ்ந்துள்ளது. இந்நாட்டிலும் அவ்வாறானதோர் மாற்றம் நிகழ இளைஞர்களின் ஆர்வமும், பங்களிப்பும் தேவைப்படுகின்றது.
விளையாட்டுப் போட்டிகளைப் போன்றது தான் அரசியல் களமும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான மாபெரும் இறுதிப் போட்டியாகும். இதில் நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம்.
அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதற்கு பொதுமக்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfry.html
பெறுமதிமிக்க காணிகளில் கைவைக்கும் கோத்தபாய! சுளையாக கிடைக்கும் இலாபம்!
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:42.24 PM GMT ]
நாடெங்கிலும் உள்ள பெறுமதிமிக்க காணிகளை முறைகேடாக கைப்பற்றி விற்பனை செய்வதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகைப் பணம் உழைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடெங்கிலும் உள்ள இவ்வாறான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பேரால் சுவீகரித்து, பின்னர் அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தற்போது கோத்தபாயவின் பிரதான நடவடிக்கையாக உள்ளது.
இதன் பிரகாரம் அண்மையில் 2014.07.28ம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 14/1041/503/093 இலக்க அமைச்சரவைப் பத்திரம் மூலம் கண்டி சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அக்காணி ஆசிரி மருத்துவமனை நிர்வாகத்துக்கு விற்பனை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014/07/28 ம் திகதி 14/1054/503/097 இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரம் மூலம் ராஜகிரிய, மாதின்னாகொடையில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. அக்காணி தற்போது அரலிய கிராண்ட் கொழும்பு ஹோட்டல் என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
2014/07/31 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 14/1052/503/095 இலக்கமுடைய அமைச்சரவைப் பத்திரம் மூலம் கொள்ளுப்பிட்டியில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இக்காணியும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
இவ்வாறாக விற்பனை செய்யப்படும் காணிகள் தொடர்பில் தெளிவான விபரங்களோ, காணியின் அளவோ குறிப்பிடப்படாமலேயே இந்த கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்றது. இதன் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகைப் பணத்தை முறைகேடான வழியில் உழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfrz.html

Geen opmerkingen:

Een reactie posten