கடந்த சப்பறத் திருவிழா அன்று நல்லுார்ப் பகுதியின் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற ஒரு யுவதி தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுப்பதில் பிரச்சனை எனத் தெரிவி்த்து கோவிலுக்கு போவதற்காக சென்ற இளைஞனை அழைத்து தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்க சொல்லி அவன் அழைப்பு எடுத்து பரிசோதனை செய்த பின் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு அவனது இலக்கத்திற்கு இரவு வேளை தொடா்பு எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தான் வவுனியாவைச் சோ்ந்தவள் என்றும் தற்போது தான் பேரூந்தைத் தவறவிட்டு நிற்பதாகவும் தனக்கு இடம் ஒன்று தங்குவதற்கு தேவை எனவும் குறித்த இளைஞனுக்கு யுவதி தொலைபேசியில் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை இவா்களில் சிலா் பொலிசாரின் ஆதரவுடன் செயற்படுவதாகவும் நேற்று இரவு நல்லுார் முத்திரைச் சந்திப் பூங்காவுக்குள் இவ்வாறான ஒரு பெண்ணையும் ஆட்டோச் சாரதி ஒருவரையும் சிலா் பிடித்த போது அப் பகுதிக்கு வந்த சீருடையில் இல்லாத பொலிசார் குறித்த பெண்ணை மீட்டுச் சென்றுள்ளனா். அந்த ஆட்டோச் சாரதியைக் கொண்டே ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகின்றது. குறித்த பொலிசார் சீருடையில் இல்லாத காரணத்தால் பொலிசாரது இலக்கங்கள் இல்லாததால் பொலிசார் செய்யும் இவ்வாறான செயல்களை அடையாளப்படத்த முடியவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
http://www.athirvu.com/newsdetail/867.html
Geen opmerkingen:
Een reactie posten