தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை: புலம்பெயர் தமிழர்களுக்கு உரிமையும் இல்லை: BTF இன் துரோகம் !

தனி ஈழம் என்பது சாத்தியல் அல்ல. மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கு அது தொடர்பாக முடிவெடுக்க உரிமையும் இல்லை. என்ரு பிரித்தானிய தமிழர் பேரவை BTF கூறியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை தொடர்பாக பேசவல்ல நிர்மலன் என்னும் நபரே இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஈழம் என்பது வெறும் பகல் கனவு என்று சிங்களவர்கள் தான் கூறிவந்தார்கள். தற்போது சில தமிழ் அமைபுகளும் இதனையே கூற ஆரம்பித்து சிங்கள அரசுக்கு துணைபோக ஆரம்பித்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்காகவா 44,000 போராளிகளையும், 1 லட்சம் பொதுமக்களையும் நாம் இழந்தோம் ? கடந்த மே மாதம் 18ம் திகதி அன்று, லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தேசிய கொடியை ஏற்ற BTF அமைப்பு மறுத்தது. அது மகிந்தருக்கு பிடிக்காது, அது சிங்களத்தை மேலும் ஆத்திரமூட்டும் செயல் என்று கூறுகிறார்கள் இவர்கள்.
ஆனால் இளையோர்கள் அன்று அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய கொடி ஏற்றிய பின்னரே, மே 18 நிகழ்வை நடத்த அவர்கள் அனுமதித்தார்கள். இன் நிலையில் இன்று, தமிழீழம் என்பது சாத்தியமற்ற விடையம் எனவும், புலம்பெயர் தமிழர்கள் இதில் முடிவெடுக்க முடியாது எனவும் BTF இனர் கூறியுள்ளார்கள். அப்படி என்றால் புலம் பெயர் நாட்டில் உள்ளவர்கள் என்ன ஆபிரிக்காவில் பிறந்த தமிழர்களா ? ஈழத்தில் இன அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தான், அங்கிருந்து தமிழர்கள் வெளிநாட்டுக்குச் சென்றார்கள். இன்று கூட அங்கே தமிழர்கள் வாய் திறந்து பேச முடியவில்லை. அதன் காரணமாக தான் , வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தம் உறவுகளுக்காக வெளிநாட்டில் இருந்த படி போராடுகிறார்கள்.
புலம்பெயர் நாட்டில் இருந்து BTF என்னும் அமைப்பை தொடங்கி, போராட்டங்களை நடத்திவிட்டு தற்போது அப்படிச் செய்யமுடியாது அதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என்று கூற இவர்கள் யார் ? இதில் இருந்து மக்களுக்கு ஒரு விடையம் நன்றாக தெரியவேண்டும். 2009ம் ஆண்டு இருந்த BTF அமைப்பினர் வேறு, தற்போது அதனை கைப்பற்றியுள்ள நபர்கள் வேறு. இவர்கள் BTF என்னும் அமைப்பை கைப்பற்றி தற்போது இயக்கி வருகிறார்கள். இவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. இலங்கை அரசு 16 வெளிநாட்டு தமிழ் அமைபுகளை தடைசெய்துள்ளது என்று அறிவித்த நாள் முதலாக, BTF அமைப்பினரின் பேச்சு மூச்சை காணவில்லை. இப்போது இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களையும் இவர்கள் முன்வைக்கிறார்கள். தமது நிலைப்பாடு தொடர்பாக இவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம். கடந்த சில மாதங்களில் மட்டும் BTF அமைப்பு மக்கள் மத்தியில் இருந்த செல்வாகை பெருமளவு இழந்துள்ளது என அறியப்படுகிறது.
இந்த அமைப்பை தற்போது நடத்திவரும் குழுவினர், இதனை நிர்மூலமாக நினைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக மக்கள் பலர் அதிர்வுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் குறித்து பேச எந்த தகுதியோ தராதரமோ கிடையாது என்று BTF கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? உங்கள் கருத்தை பதிவுசெய்யவும். நன்றி:
http://www.athirvu.com/newsdetail/868.html

Geen opmerkingen:

Een reactie posten