தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் முறைகேடா ? அமைச்சரின் உறவினருக்கு பதவி !

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நெருங்கிய உறவினரான பெண்ணொருவருக்கு அமெரிக்க தூதரக நியமனம் வழங்கப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜனத்திரி நாணயக்கார என்பவருக்கு அமெரிக்க தூதரகத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர் அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் பட்டதாரி எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சகோதரரின் மகளான இவரை அவரது கல்வித்தகுதி மற்றும் அவரது சுயவிவரக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட திறமைகள் என்பவற்றை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டே நியமிப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் வெளிவிவகார சேவையில் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளிவிவகார சேவைக்கான பரீட்சையில் தோற்றதா, நேர்முக பரீட்சையை எதிர்கொள்ளதா ஒருவரை நியமித்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிற்கான தூதரகத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் நியமனம் பெற்றவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தூதுவருக்கு முன்னர் அப்பதவியை வகித்த ஜாலிய விக்கிரமசூரிய ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் சமித்திரியும் அங்கு பணிபுரிகிறார்.
இலங்கையின் வெளிவிவகார கொள்கை கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள நாடொன்றிற்கு அரசியல் நியமனங்களை வழங்கும் முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளாகள் அதன் காரணமாகவே அமெரிக்காவில் இலங்கையின் நன்மதிப்பை கூட்டுவதற்காக பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் நியமனங்கள் குறித்து கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், குறிப்பிட்ட நியமனம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/862.html

Geen opmerkingen:

Een reactie posten