விரைவில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் நீதிபதி கணேசராஜா …
உலக கரிசனை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சிறகுகள் நூல் வெளியிட்டு விழாவின் முல்லை அரச அதிபருடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையற்றுகையில்
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தகமாணியில் பிரசுரிக்கப்பட்டு மிகவிரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கிம் ஆகியோரின் பெருமுயற்சியினால் இச்சட்டமூலம் விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சிறுவர் தொடர்பான பிரத்தியோக நீதிமன்றங்கள் வடமேல் மாகணத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் நீதிமன்றங்களில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு குறிப்பாக சிறுவர்களை பாதுகாப்பதற்கு இச்சட்டமூலம் மிகவும் உதவும் என குறிப்பிட்டார்.
மேலும் இலத்திரனியல் நடைமுறைமூலம் துரப்பிரதேசங்களிலிருந்து சாட்சிகளை வழங்கும் நடைமுறையும் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸின் கடும் முயற்சியினால் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின் முயற்சியால் 23 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை முல்லை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும் எனவும் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/80364.html
அனந்திக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்…
தொண்டர் இராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோருடன் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்று இடம்பெற உள்ளதாக கூறியே தாம் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்றைய விசாரணை திகதி குறித்து ஒத்தி வைக்கப்படுமென்ற தகவல் அடிப்படையில் அனந்தியோ ஏனைய காணாமல் போனவர்களது உறவுகளோ முல்லைதீவிற்கு சென்றிருக்கவில்லை.
எனினும் இன்றைய விசாரணை திகதி குறித்து ஒத்தி வைக்கப்படுமென்ற தகவல் அடிப்படையில் அனந்தியோ ஏனைய காணாமல் போனவர்களது உறவுகளோ முல்லைதீவிற்கு சென்றிருக்கவில்லை.
எனினும் அவர்கள் நீதிமன்றினுள் இருப்பதாக கருதியே இராணுவ புலனாய்வு பிரிவினர் இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியதாக தெரியவருகின்றது. கடந்த தவணையின் போதும் இதே போன்றே ஆர்ப்பாட்டமொன்று இராணுவ புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்டிருந்த நிலையில் காவல்துறை பாதுகாப்புடனேயே அனந்தி மற்றும் காணாமல் போனோரது குடும்பங்கள் முல்லைதீவிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80372.html
சுன்னாகத்தில் மாயமாய் மறைந்த இராணுவ முகாம்!
இந்த இராணுவ முகாமை அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்ட காணி சுன்னாகம் பொலிஸ் நிலையத் மற்றும் பொலிசாருக்கான விடுதிகள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிலமாக இருந்த நிலையில் இராணுவத்தினர் தமது முகாமை அமைத்து இருந்தார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்ட காணி சுன்னாகம் பொலிஸ் நிலையத் மற்றும் பொலிசாருக்கான விடுதிகள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிலமாக இருந்த நிலையில் இராணுவத்தினர் தமது முகாமை அமைத்து இருந்தார்கள்.
தற்போது இராணுவ முகாம் அகற்றப்பட்டு இந்த இடத்தில் இருந்த இராணுவத்தினர் தமது முகாமை மூடி சென்றுள்ள நிலையில் பொலிசார் தமக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பொலிஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பொலிஸ் நிலையம் அமைக்க தற்காலிகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
http://www.jvpnews.com/srilanka/80386.html
Geen opmerkingen:
Een reactie posten