இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் இம்மாத இறுதிக்குள் மீட்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி!
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:43.53 AM GMT ]
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் சிலர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
அவரும் வெளிநாடு சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து நேரில் சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 62 மீன்பிடி படகுகளையும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னதாக மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஏனென்றால், செப்டம்பர் மாதம் இலங்கை கடற்கரையோர பகுதியில் புயல் வீசக்கூடும். இதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, அதற்கு முன்னதாக சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை மீட்க வேண்டும் என்று தெரிவித்தோம்.
அமைச்சரும் இம்மாத இறுதிக்குள் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள எங்கள் 62 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeuz.html
கூட்டமைப்பு–மோடி சந்திப்பானது இலங்கைக்கு ஐஸ்வாளி சவால்!- தயான் ஜயதிலக அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:58.49 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலையில் குளிர்ந்த நீரை ஊற்றும் ஐஸ் வாளி சவால் என்றே நான் காண்கிறேன். இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்தில் ஐஸ் வாளியில் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அரசாங்கத்திடம் மண்டியிட்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் வரும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில்லை என அரசாங்கம் எண்ணியது.
கூட்டமைப்பினர் யார் என்ற மமதையில் அரசாங்கம் இருந்தது. தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா, யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார். இதன் பின்னர் இந்திய பிரதமர் சந்தித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை பார்க்கும் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை போல் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காணப்பட்டது.
இதன் போது இலங்கையில் வீங்கிய தலை மீது பிரதமர் மோடி ஐஸ் தண்ணீரை ஊற்றினார். நரேந்திர மோடி பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அழைக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
எனினும் மோடி, மகிந்த ராஜபக்ஷவை அழைத்தார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டே இருந்தது. அப்போது இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பமும் இருந்தது.
நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி 13வது திருத்தச் சட்டம் குறித்து நினைவுபடுத்தினார்.
ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிய குறித்து குறிப்பிடவில்லை. அதில் இருந்து சிறு விரசம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்திய அமைச்சரவை அமைச்சர் பதவியை வகிக்காத சுப்ரமணியன் சுவாமியை வரவழைத்து பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்ற செய்து, அவர் கூறிய விடயங்களை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என நம்ப ஆரம்பித்தது.
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடோ சுப்ரமணியன் சுவாமியின் நிலைப்பாடோ அல்ல.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமரை மாத்திரம் சந்திக்கவில்லை.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை சேர்ந்த எவரையும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இதுவரை சந்திக்கவில்லை. அயல் நாட்டுடன் மேற்கொள்ளும் தொடர்புகளில் குறித்த முகாமைத்துவத்தின் குறைபாட்டையே இது காட்டுகிறது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
என்னிடம் விட்டுவிடுங்கள்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்: கூட்டமைப்பிடம் மோடி தெரிவிப்பு
இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுவராஜ் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச் சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா என்பதை தான் ஆராயவதாகவும் அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறியதாகவும் செல்வராசா கூறினார்.
அத்துடன் இந்தியா 100க்கு 100 வீதம் தம்முடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் பொன். செல்வராசா இந்த தகவல்கள் வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu0.html
அமைச்சர் மைத்திரிபாலவிடம் கையும் மெய்யுமாக சிக்கிய கோத்தாவின் உளவாளி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 07:05.25 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை உளவு பார்த்த நபர் கையும் மெய்யுமாக சிக்கிய சம்பவத்தால் ஆளும் கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை உளவு பார்ப்பதற்காக, அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டாரத்திற்குள் ஒருவரை நியமித்துள்ளார்.
குறித்த நபர், அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் அமைச்சர் தொடர்பான சகல தகவல்களையும் ஒவ்வொரு நாளும் கோத்தபாயவிடம் தெரிவித்து வந்துள்ளார்.
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கோத்தபாயவினால் உளவு பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நபரிற்கு சம்பளமாக 50000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் எல்லா உண்மைகளையும் கக்கியுள்ளார்.
இதனையடுத்து, ஆளும் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் பணியாளர்கள் குறித்து அச்சம் தோன்றியுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களும் யார் உளவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதனை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu1.html
Geen opmerkingen:
Een reactie posten