தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

சாட்சியாளர்கள் ஜெனீவா பயணம் செய்ய ஏற்பாடுகள் வேண்டும்

சகல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விசாரணையாம்…

தேசிய பாதுகாப்பு நோக்கிற்காக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பிரதான பொறுப்புக்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் அதே விதமாக தற்போதும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கெஹலிய தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78105.html

எனக்கும் மிரட்டல் மாதுலுவே சோபித தேர…

செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பாரிய பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமது நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் சில அரச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருவதாக மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் சேறு பூசல்களின் மூலம் தமது செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முனைப்புக்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இணைய தளமொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78108.html

மகிந்தரை விட்டு விலகப் போவதில்லை – ஹக்கீம்

கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி அங்கம் வகித்துக் கொண்டே அழுத்தம் கொடுக்க உத்தேசித்திருப்பதாகவும் உள்ளிருந்து அழுத்தம் கொடுக்கும் ஓர் தரப்பாக செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பேருவளை அலுத்கம சம்பவங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கட்சி அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதிக்கும் ஹக்கீமிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78111.html

சாட்சியாளர்கள் ஜெனீவா பயணம் செய்ய ஏற்பாடுகள் வேண்டும்

எவ்வாறெனினும், இந்த விடயம் நடைமுறைச் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார். சாட்சியாளர்களுக்கு ஜெனீவா பயணம் செய்ய தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வதற்கு பாரியளவில் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்கைப் உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களின் ஊடாக சாட்சியங்களை பதிவு செய்தல் எந்தளவிற்கு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா அல்லது பிரிதொரு நாட்டில் சாட்சியாளர்ளை நேரடியாக அழைத்து சாட்சியங்களை திரட்டுவது மிகவும் சிறந்த வழியாக அமையும் என அவர்தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் தமது தனிப்பட்ட கருத்துக்கள் எனவும், மனித உரிமை ஆணைக்குழுவின் கருத்தாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78114.html

Geen opmerkingen:

Een reactie posten