தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையை சேர்ந்த பாலு, போதுமணி தம்பதியருடைய மகள் அழகுமணி (23) மற்றும், இவர்களது உறவினர் ராஜாராமின் மகன் இளையராஜா (27), இருவரும் அண்ணன் – தங்கை உறவு முறையானபோதிலும், வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இந்த விடயம் தெரியவந்ததும், இரு வீட்டு பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரிடமும், நீங்கள் இருவரும் அண்ணன் – தங்கை உறவுமுறை, நீங்கள் காதலிக்கும் விடயம் ஊருக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும்.
எனவே காதலை கைவிட்டு விடுங்கள் என்று எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல் அவர்கள் காதலித்துள்ளனர். இதையடுத்து, தங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதால் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனால் அவமானம் அடைந்த அழகுமணியின் தாய் போதுமணி அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஓடைப்பட்டி பொலிசார் போதுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், போதுமணியின் தற்கொலைக்கு இளையராஜாவின் உறவினர்கள்தான் காரணம் என்று போதுமணியின் உறவினர்கள் பொலிசாரை முற்றுகையிட்டு வலியுறுத்தியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten