கூட்டமைப்பு வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் இடம்பெற்ற மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
முன்னதாக குறித்த பிரதேச சபையினில் அட்டவனைப் படுத்தப்படாத பதவி வெற்றிடம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் கோரப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றிருந்தது.
நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 10 ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்பட்டது. எனினும் நேர்முகப்பரீட்சை நடைபெற்று நியமனங்கள் வழங்கப்படுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பணியாளர்களை தெரிவுசெய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தகுதி இல்லாதவர்களை தவிசாளர் தெரிவு செய்ததாகவும் ஆளும்கட்சி கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரும், எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களும் குற்றச்சாட்டிவந்துள்ளனர்.
இக்குழப்பங்களுக்கு இடையே இம்மாதம் 28.07.2014 ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளரிடம் உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளின் ஆவணங்களை பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தபோது, தவிசாளர் சோ.சுகிர்தன் ஆவணங்களை சபையில் தற்போது சமர்ப்பிக்க முடியாது என்றும் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் சபையில் அதிருப்தியான உறுப்பினர்கள் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து சாரதிகளுக்கான நியமனம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு தவிசாளர் சமர்ப்பித்துள்ளார். அதில் தவிசாளர் சுகிர்தனின் தனிப்பட்ட உதவியாளரும் குடும்ப சாரதியுமாகவும் இருந்தவருக்கு சாரதி நியமனத்தை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் சுகிர்தனின் சாரதியாக இருப்பவருக்கு சாரதி நியமனம் வழங்கப்பட்டதில் வாகனத்தை செலுத்தவதற்கான தராதரம் இன்மை நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சபை உறுப்பினர்கள் தவிசாளரை நோக்கி கேள்விகளைத் தொடுத்தபோது சபையை அடுத்த கூட்டம்வரை ஒத்திவைப்பதாகக் கூறி வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே சுடலைக் காவலாளி நியமனத்திற்கு தவிசாளர் தனது உறவினர் முறையான ஒருவரை நியமனம் செய்து அவரை தன்னுடன் அலுவலக பணியில் அமர்த்தியிருப்பதாக ஆளும்கட்சி உறுப்பினர்களாலேயே குற்றஞ் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
http://www.jvpnews.com/srilanka/78118.html
Geen opmerkingen:
Een reactie posten