வெளிநாட்டில் இருந்து வந்து நகைகளை பறிகொடுப்பவர்கள் யார் ?
[ Aug 25, 2014 06:06:35 AM | வாசித்தோர் : 13220 ]
இதேவேளை சொல்லிவைத்தால் போல பலரது முறைப்பாட்டில், 40 பவுன் நகைகளை காணவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் பொலிசார் வெளிநாட்டு தூதரகங்களை தொடர்புகொள்ள இருப்பதாக யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ஒரு வெளிநாட்டில் இருந்து ஒருவர் விமான நிலையம் வழியாக எவ்வளவு நகைகளை கொண்டுசெல்ல முடியும், அதாவது எவ்வளவு எடையுள்ள தங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என்று, பிரித்தானியா, ஜேர்மனி , பிரான்ஸ் , மற்றும் கனடா போன்ற நாட்டு தூதரகங்களிடம் தான் கேட்க்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஏன் எனில் இவ்வளவு தொகையான நகைகளை ஏன் இவர்கள் அணிந்து வருகிறார்கள் என்று தமது தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இவ்வாறு இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பலர், நகைகளை காணவில்லை என்றும் மற்றும் பெறுமதியான பொருட்களை காணவில்லை என்றும் பொலிசில் முறைப்பாடு செய்து அதன் பிரதியை எடுத்து வந்து இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்றும், இதன் காரணமாகவே தாம் இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் யாழ் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் முறைப்பாடு செய்த நபர்களின் பெயர் விபரங்களை தாம் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இராணுவம் செய்யும் ரகசியம். வெளியாகியுள்ள புதிய சட்டலை படங்கள் !
[ Aug 23, 2014 10:54:50 PM | வாசித்தோர் : 52825 ]
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர், யாழில் உள்ள பலாலிப் பகுதியில் என்ன நடக்கிறது ? என்ற அதிரும் புகைப்படங்களை அமெரிக்க சட்டலைட் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறிவரும், இலங்கை அரசு தமது இராணுவத்தை மேலும் மேலும் விஸ்தரித்து வருகிறது என்ற அதிர்சி தகவலும் தற்போது இதனூடாக வெளியாகியுள்ளது. பலாலி விமான தளத்தினை அண்டியுள்ள பகுதியில், இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தெளிவாக , இலங்கை அரசின் அனுமதி இன்றியே உயர் பாதுகாப்பு வலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுசாட்டலைட் உதவியோடு American Association for the Advancement of Science (AAAS) படம் பிடித்து, அதனை ஆராய்ந்துள்ளார்கள் என்பதும் மிக முக்கியமான விடையம் ஆகும். இங்கே என்ன நடக்கிறது என்பதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இன் நிலையை நாம் பார்த்தால், இன்னும் 100 வருடங்களுக்கு சிங்கள இராணுவமானது யாழ் மண்ணை விட்டுச் செல்லாது என்பது உறுதியாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப் பரப்பை பிடித்து, பல ஆண்டுகளாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். போர் நடைபெற்ற காலகட்டங்களில் கூட, பலாலி இராணுவ முகாமும் அதன் சுற்றுவட்டாரமும் இவ்வளவு தூரம்விஸ்தரிக்கப்பட்டது இல்ல. ஆனால் தற்போது அது இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. அங்கே அமைக்கப்படும் சிறிய விடுதிகள், இராணுவத்தினரின் உறவினர்கள் வந்தால் தங்கிச் செல்லவே அமைக்கப்பட்டும் வருகிறது. கீழ் காணும் புகைப்படங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு தூரம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது என்பதும், இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் புரியும். புது புது வீடுகள், கட்டடங்களும் அங்கே கட்டப்பட்டு வருகிறது.
2009 ல் எவ்வளவு வேலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டது என்று பாருங்கள். இதேவேளை 2014ம் ஆண்டில் எவ்வளவு வேலைப்பாடுகள் தற்போது நடைபெறுகிறது என்பதனையும் அட்டவணையில் பாருங்கள். அனைத்து விடையங்களும் புரியும்.
அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியின் இணையத்தை பார்க இங்கே சொடுக்கவும்.Click here to see the ENGLISH REPORT
Geen opmerkingen:
Een reactie posten