தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கோழை: விமர்சிக்கும் பசுமைக் கட்சி

இலங்கையின் அவதூறு விவகாரம்! மன்னிப்பு கேட்டதால் முடிந்து போன விடயம்: சுப்பிரமணிய சாமி
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:19.13 AM GMT ]
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறுகையில்,
ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்தை இணையத்தளத்தில் வெளியிட்டதற்காக இலங்கை மன்னிப்பு கேட்டிருப்பதால், இந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும்.
மேலும், இந்திய வெளியுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo4.html
குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கோழை: விமர்சிக்கும் பசுமைக் கட்சி
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:24.46 AM GMT ]
குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், "இக்கட்டான" மற்றும் "கோழைத்தனமான நடவடிக்கைகளில் மிகவும் பெயர் பெற்றவர் என எதிர் கட்சி விமர்சித்துள்ளது
பல எதிர்ப்புகள் பல ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசி எப்படியாவது இவர்களை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் தோல்வியடைந்தும் இந்தியாவுடன் பேசி கள்ளத்தனமாக சுங்க கப்பலை அனுப்பியிருந்தார்.
அந்த வாய்ப்பும் தோல்வி அடைந்த காரணத்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை கேர்ட்டின் முகாமுக்கு மாற்றுவதாக நாடகமாடி அவர்களை நவ்ரு முகாமுக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.
ஆனால் அரசு செய்கின்ற இந்த கடும்போக்கான நடவடிக்கை சரியானது என நியாயப்படுத்தியுள்ளார் மொரிசன்.
கேரட்டின் முகாம் சிறுவர்களுக்கு மோசமானது என கூறிய எதிர் கட்சி, நவ்ரு முகாமிலும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு மற்றும் பசுமைவாதிகளின்  விமர்சனங்களுக்கு மத்தியில்,  ஒரு WA காவல் நிலையத்தில் இருந்து 157 புகலிடம் கோருவோரையும் நவ்ரு தீவுக்கு  அனுப்பிய முடிவை நியாயப்படுத்தினார் மொரிசன்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo5.html

Geen opmerkingen:

Een reactie posten