குறிப்பாக தமிழ் நாட்டில் பல கட்சிகள் உள்ளது. வைகோ அவர்களின் கட்சி மற்றும் நெடுமாறன் போன்றவர்களின் இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவாகவே, ஈழ உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் சொல்லப்போனால் திமுக வில் உள்ள பலரும் கூட ஈழ உணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.கா வில் மட்டும் அது சற்றுக் குறைவாகவே காணப்படுகிறது. அம்மாவை பொறுத்தவரை அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி அல்ல என்பது அனைவரும் அறிந்த விடையம். அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள, படித்த சமூகம் மற்றும் மேல் தட்டு வர்கள் என்று இருக்கும் ஐயர் மார்கள், அம்மாவை தான் வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்கள்.
இவர்கள் மத்தியில் ராஜீவ் கொலை பெரும் தாக்கம் ஒன்றை உருவாக்கி இருந்தது. இதனால் இவர்கள் பார்வையில் அனைத்து ஈழத் தமிழர்களும் தீவிரவாதிகள் தான். இன் நிலை நேற்றோடு சற்று மாறியுள்ளதோடு மகிந்தரின் ராஜதந்திரத்திற்கு விழுந்த முதல் அடியாகவும் இது கருதப்படுகிறது. நரேந்திர மோடி மீது ஜெயலலிதா காதல் கொண்டு உள்ளது போல, இலங்கை அரசு திணைக்களம் செய்தி வெளியிட்டது அந்த அம்மாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கி விட்டது. அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "காதல்" அட கை வைக்க கூடாத இடத்தில் கைவைத்துவிட்டார்கள் சிங்களவர்கள்.
அம்மா இதுவரை எந்த ஆண் வாடையும் இல்லாது, தனது காலத்தை கழித்து வரும் நிலையில், இவ்வாறு சிங்கள அரச ஊடகம் படத்தை போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அம்மாவின் ஆதரவாளர்கள், படித்தவர்கள், மேல் தட்டு வர்கத்தினர் என அனைவரும் களத்தில் இறங்கி மகிந்தரின் புகைப்படங்களை எரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை பல ஐயர் மாரே செய்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். இதனால் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவு, ஆதரவு அதிகரித்துள்ளது. இதனை நாம் எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten