தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

காஸாவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி - ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?


தமிழக மீனவர்களின் கச்சதீவு போராட்டம் இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு- போராட்டம் திடீர் வாபஸ்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:36.56 AM GMT ]
இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கச்சதீவுக்கு செல்லும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­­படி இன்­றைய தினம் வெள்ளைக்­கொடி சகிதம் கச்­ச­தீவில் சரணாகதியடையவுள்ளோம் என மீனவர் சங்­கத்தின் தலைவர் என். தேவதாஸ் தெரி­வித்தார்.
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுவிக்கக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இலங்கை சிறைகளில் உள்ள 93 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வர மீனவர்கள் கடந்த 24ம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை தொட்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமது விடயம் குறித்து தமிழக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி தருகின்ற. எனினும் மத்திய அரசாங்கம் தமது நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே கச்சதீவுக்கு செல்லும் போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இருந்தபோதும் தமிழக அரசோ அல்லது இலங்கை இந்திய மத்திய அரசாங்கங்களோ எம்முடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது பாராமுகமாகவே இருக்கின்றது.
அவ்வாறான நிலையில் நாம் தொடர்ந்தும் எமது சொந்த நிலங்களில் பட்டினி வாழ்வைத் தொடரமுடியாது என்ற காரணத்தால் திட்டமிட்டதன் பிரகாரம் வௌ்ளைக்கொடியுடன் கச்சதீவை அடைவோம்.
முன்னதாக தமிழக மீனவர்கள் வௌ்கைக்கொடியுடன் கச்சதீவுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அவ்வாறு வருகை தரும் பட்சத்தில் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.
அதேநேரம் தமிழக மீனவர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்வதுடன் இவ்வாறு வருகை தருவதனால் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடமாட்டாது என்பதுடன் மேலும் சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தி இராஜதந்திர உறவையும் பாதிப்படையச் செய்யும் என இலங்கை இந்திய மீனவர் சங்கத்தின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கச்சதீவில் மீனவர்கள் தஞ்சம் அடையும் போராட்டம் திடீர் வாபஸ்!
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் உறுதிமொழியை ஏற்று இராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடலில் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து துறைமுகத்துக்கு மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கிருந்து படகுகளில் கச்சதீவு செல்ல முடிவு செய்திருந்தனர்.
இதனிடையே, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் 10 நாட்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட மீனவ சங்க பிரதிநிதிகள், கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், தங்களது வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8வது நாளாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx7.html
ஹட்சன், நிர்மலாவை வானொலி நிகழ்ச்சியின் போது விமர்சித்தார்!
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:49.07 AM GMT ]
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தில் கொல்லப்பட்ட முன்னாள் முன்னணி சிங்கள அறிவிப்பாளர் பிரேமகீர்த்தி டி அல்விஸின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பிரேமகீர்த்தியின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்ற வேளையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முன்னால் வைத்து பிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலா டி அல்விஸ் தமது கௌரவம் பாதிக்கப்படும் வகையில் செயற்பட்டதாக ஹட்சன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தமது கணவரை கொலை செய்யவில்லை என்றும், அரசாங்கத்தின் பின்னால் இருப்பவர்களே அவரைக் கொலை செய்ததாகவும் நிர்மலா ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் காலை நேர நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த ஹட்சன் சமரசிங்க, நிர்மலாவின் கருத்தை விமர்சித்தார்.
இதன்போது அவர் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfoy.html
பொரளையில் ஒருவர் சுட்டுக்கொலை (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 05:29.43 AM GMT ]
கொழும்பு 8 பொரளை பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை நிக்ரோதாராம வீதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் நடந்த இந்த சம்பவத்தில் பேஸ்லைன் வீதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இறந்த நபர் சலூனில் முடி வெட்டிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பேஸ்லைன் வீதியை சேர்ந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்பு இருக்கின்றதா என்பதை அறிய பொரளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பண மோசடி செய்த கொரியா நாட்டுப் பிரஜைக்கு விளக்கமறியல்!
வத்தளை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை வத்தளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜை 45 லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் 59 வயதான தென் கொரிய பிரஜை எனவும் சம்பவம் தொடர்பாக பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி
கண்டி மாவட்டம் வத்தேகம, பன்வில பிரதேசத்தில் இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக பன்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவனும் மனைவியும் தமது வீட்டிற்குள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான கணவனும் 24 வயதான மனைவியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பன்வில பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளும் சிறிய ரக டிப்பர் வாகனம் ஒன்றும் ஓட்டமாவடி பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற வாழைச்சேனை ஹைராத் பாடசாலை வீதியைச் சேர்ந்த அசனார் ஹிதாயத்துல்லாஹ் (வயது 38) மற்றும் அதேவீதியைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது அப்துல் காதர் (வயது 47) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
இவர்கள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன மோதல்களை ஏற்படும் நோக்கில் குறுஞ் செய்தி: இராணுவம்
மத மற்றும் இனவாத மோதல்களை ஏற்படுத்தும் விதத்தில் பொய்யான தகவல் ஒன்று தொலைபேசி குறுஞ் செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பபட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பரப்பி வரும் நபர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo0.html
காஸாவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி - ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 05:33.22 AM GMT ]
பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதான வீதிக்கருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலிலிருந்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இம்மாபெரும் கண்டனப் பேரணியில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மூபீன், நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) உட்பட ஆயிரக் கணக்கான பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இக்கண்டனப் பேரணியில், கலந்து கொண்டோர், அரபு உலகமே கண்களைத் திற, காஸாவில் குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து, சியோனிசப் பயங்கரவாதத்தின் அழிவுக்குப் பிரார்த்திப்போம், காஸாவுக்காக பிரார்த்திப்போம், பலஸ்தீனுக்குச் சுதந்திரம் போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கிலப் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பேரணி இறுதியில், காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், அதனை நிறுத்தக் கோரியும், இலங்கை அமெரிக்கத் தூதரகம், முஸ்லிம் நாடுகளுக்கான தூதுவராயலயங்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்புவதற்கான மகஜர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் காத்தான்குடிப் பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது.
இப்பாரிய கண்டனப் பேரணி, காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடிப் பிரதேச செயலகம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
பேரணி இறுதியில், இஸ்ரேரல் நாட்டுக் கொடி தீ மூட்டி எரிக்கப்பட்டது. கண்டனப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இடையில் இது தொடர்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால், கூடுதலான வாக்குகளை பெற முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சி இதுவரை தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தால், கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்ட போது, எந்த கட்சியாக இருந்தாலும் கட்சியின் கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பதாகவும் வேட்பாளர் பட்டியலில் இன்னும் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo1.html

Geen opmerkingen:

Een reactie posten