தமிழ், முஸ்லிம் கிராமங்களை அழிக்க வேண்டும்! ஞானசார தேரர் - வடக்கில் பார்த்தீனியம்: ஒழித்துக் கட்டிய விவசாய அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 07:41.39 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
வாக்கு வங்கியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனி தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இருப்பதை கண்டு கொள்வதில்லை, ஆனால் இனி வரும் காலங்களில் அவற்றை மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் சிங்கள மக்கள் கலந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், அதற்கேதுவாக எதிர்காலத்தில் தமிழ், சிங்கள கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட் வேண்டும், இந்த செயற்திட்டத்தை பௌத்த பிக்குகளின் ஆசியுடன் பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும்.
சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பான வழியிலோ அனைத்துப் பிரதேசங்களிலும் சிங்கள மக்கள் பரந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், இதற்காக மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படும், அவர்கள் எதிர்த்தாலும் இந்தச் செயற்திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் வகையிலான பயிற்சி மற்றும் செயலமர்வுகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவும் பொதுபல சேனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கில் பெருகிய பார்த்தீனியம்: ஒழித்துக் கட்டிய விவசாய அமைச்சர்
வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாகத் தற்போது பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தைக் கிலோவுக்கு 10 ரூபா வீதம் கொடுத்துக் கொள்வனவு செய்து பின்னர் அதனை எரித்து அழிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இது வரையில் மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ளது. இதில் முதலாம் கட்டமாக 9,230 கிலோவும், இரண்டாம் கட்டமாக 27,470 கிலோவும் மூன்றாம் கட்டமாக 73,934 கிலோவும் பொதுமக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்றாம் கட்டப் பார்த்தீனிய ஒழிப்பில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் சி.சிறிபாலசுந்தரம் ஆகியோரும் பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபட்ட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgu7.html
தடுப்பு முகாம்களுக்குள் சிறுவர்களுக்கு என்ன நடக்கிறது?! அறிக்கையை மறைக்கும் அவுஸ்ரேலிய அரசு
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 08:02.21 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களுக்குள் சிறுவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கு இன்னமும் கூடுதலாக
விளக்கம் அளிக்கப்பட வேண்டுனெ அவர் சுட்டி காட்டியுள்ளார்
விளக்கம் அளிக்கப்பட வேண்டுனெ அவர் சுட்டி காட்டியுள்ளார்
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகள் பற்றிய விசாரணை இடம்பெற்ற போது, பிள்ளைகளின் உளவியல் சுகாதார விவாகாரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கிறது
என்பதை சுட்டிக்காட்டும் தகவல்களை வெளியிட்ட போது, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன
என்பதை சுட்டிக்காட்டும் தகவல்களை வெளியிட்ட போது, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன
’இந்தப் புள்ளிவிபரங்களை அறிக்கைகளில் இருந்து அப்புறப்படுத்தி விடுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக’ தடுப்பு முகாம்களுக்கு சேவைகளை வழங்கும் சர்வதேச சுகாதார மற்றும் உளநல சேவைகள் (IHMS) என்ற அமைப்பின் பணிப்பாளார் வைத்திய கலாநிதி பீறறர் யங்.தெரிவித்துள்ளார்.
இவ்வமைப்பு சேகரித்த தகவல்களின் அடிப்படையில், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மத்தியில் கணிசமான மனநல சுகாதார பிரச்சனைகள்
உள்ளதென தெரியவந்துள்ளது.
உள்ளதென தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான சிறுவர் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மத்தியில் மனநல பிரச்சனைகள் 30 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புள்ளி விபரங்களை நீக்கி விட்டு, தமக்கு சாதகமான விதத்தில் அறிக்கை வரையுமாறு டாக்டர் பீற்றர் யங்கிடம் கோரிக்கை விடுத்திருப்பது, அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் மிகவும் மோசமான நடைமுறையை காட்டுவதான விடயமென பேராசிரியை ட்ரிக்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgvz.html
Geen opmerkingen:
Een reactie posten