ரேடியோ நியூஸிலாந்து இதனை அறிவித்துள்ளது.
குறித்த இலங்கையர் சிறிய வர்த்தகம் ஒன்றை செய்துவருகிறார். இவர் 23 வயதான முன்னாள் நண்பியை 2000 ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து போலி ஆவணங்களை காண்பித்து குறித்த இலங்கையர் நியூஸிலாந்துக்குள் பிரவேசித்துள்ளார்.
இந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு அவருக்கு நியூஸிலாந்தில் பிரஜாவுரிமை கிடைத்தது.
இந்தநிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான வெளியுறவு அமைச்சின் கடிதமும் கைப்பற்றப்பட்டது.
எனினும் அவரை சுவிட்ஸர்லாந்துக்கு நாடு கடத்துவதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நாடு கடத்தல் ஏற்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet5.html
Geen opmerkingen:
Een reactie posten