[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:57.37 AM GMT ]
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் குறித்த முயற்சியை மேற்கொண்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யப்போவதாக சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் 31.2 சரத்தின்படி இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடமுடியாது.
எனினும் இது 2010ஆம் ஆண்டில் 18வது சீர்திருத்தம் மூலம் மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கலாம் என்ற அம்சம் அந்த 18வது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.
இந்தநிலையில் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துதை தடுக்க நடைமுறை ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பில் அதிகாரம் இல்லை என்றும் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet3.html
ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குண்டர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:08.58 AM GMT ]
பொல்லுகளுடன் வருகைதந்த குழுவினர் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட சிலர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடைக்கு சேதம் விளைவித்த குண்டர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், குறித்த குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு வருகைதந்ததுடன், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் ஜே.வி.வி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும், சாட்சியங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் மேலதிக பொலிஸ் குழுக்கள் இரண்டு படல்கும்பர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் படல்கும்புர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet7.html
கேப்பாப்பிலவில் இராணுவத்தின் வசமுள்ள விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:34.29 AM GMT ]
இக் கிராமத்தில் தற்போது 58 விவசாயக் குடும்பங்களுக்கான 520 ஏக்கர் விவசாயக் காணிகளில் இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இறுதியாக மீள்குடியேற்றம் இடம் பெற்ற கிராமம் கேப்பாபிலவு ஆகும்.
கேப்பாப்பிலவு மக்களின் குடியிருப்பு காணிகளும் விவசாய காணிகளும் நூறு வீதம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த காரணத்தால் இக்கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சீனியா மோட்டைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் சுவீகரித்து அந்தப் பகுதிக்கு கேப்பாபிலவு மாதிரி கிராமம் எனும் பெயரை சூட்டி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் வசித்து வந்த கேப்பாபிலவு கிராம மக்களை அரசாங்கம் 20.09.2012 இல் தற்காலிகமாக அங்கு மீள்குடியேற்றியது.
தற்போது 373 குடும்பங்கள் கால் ஏக்கர் பரப்புக் கொண்ட குறித்த மாதிரி கிராமத்தினுள் முடங்கிய நிலையில் துன்பியல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
கேப்பாப்பிலவு கிராம மக்கள் முதலில் தமது சொந்த குடியிருப்பு காணிகளை விடுவித்துத் தருமாறு இராணுவத்தினரிடம் கோரிய போது இடம் பெயர்ந்த அம்மக்களின் நியாயமான கோரிக்கையை இராணுவத்தினர் அசண்டை செய்தனர்.
இந்நிலையில் குடியிருப்பு காணிகளை இராணுவம் தர மறுத்த போது இரண்டாவது கோரிக்கையாக இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்துள்ள தமது விவசாய நிலங்களையாவது முதலில் விடுவித்து விவசாயத்தை மேற்கொள்ள அனுமதி தருமாறு கோரி பல மனுக்களை இராணுவத்திடம் கையளித்திருந்தனர்.
இதன்விளைவாக 2013 இல் முதற்கட்டமாக கேப்பாப்பிலவு சீனியா மோட்டைப் பகுதி யில் 14 ஏக்கர் விவசாய நிலங்களும் இரண்டாவது கட்டமாக கேப்பாபிலவு பகுதியான உடையாவெளி, பொறுக்கன் மோட்டை, ஈச்சம் புலவு ஆகிய பகுதிகளில் 150 ஏக்கர் விவசாய நிலங்களும் கேப்பாபிலவு விவசாய மக்களின் நலன் கருதி விடுவிக்கபப்ட்டது.
தற்போது 2014 இல் மூன்றாம் கட்டமாக 03.04.2014 அன்று கேப்பாப்பிலவு வாவெட்டிப்பகுதியிலுள்ள பிட்டிக் கொட்டுப்பகுதியிலுள்ள 90 ஏக்கர் விவசாய நிலங்களை விவசாய மக்களின் நலன்கருதி விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னும் விடுவிக்கப்படாத 520 ஏக்கர் விவசாய காணிகள் தற்போது இராணுவ வசமுள்ளன.
மிகுதியான அந்த விவசாய காணிகளையும் மீட்டுத்தரக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்விடம் 03.04.2014 அன்று விவசாய மக்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்ப ட்டது.
கையளிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இது தொடர்பாக எதுவித பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விடுவிக்கப்படாத நிலையில் இயங்கன் குளப்பகுதியில் 34 விவசாயி களுக்குரிய 89 ஏக்கர் விவசாய காணிகளும் வாவெட்டிக் குளப்பகுதியில் 24 விவசாயி களுக்குரிய 431 ஏக்கர் விவசாய காணிகளுமாக மொத்தம் 58 விவசாயிகளுக்கு சொந் தமான 520 ஏக்கருக்குரிய விவசாய காணிகள் இராணுவ வசமுள்ளதால் நாம் மீள்குடி யேறி இரு வருடங்கள் கடந்தும் விவசாய தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் தற்போது 58 குடும்பங்களும் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் இரு வருடங்களுக்கான நட்ட ஈட்டினையும் இதுவரை வழங்கவில்லை. ஏனைய விவசாய காணிகளை விடுவித்தது போல் 58 விவசாயிகளுடைய காணி களையும் விடுவித்து விவசாயத்தை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தளபதி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமது வாழ்வாதாரத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeuy.html
Geen opmerkingen:
Een reactie posten