[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:03.16 AM GMT ]
இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடு ஒன்று தொடர்பில் நேற்று மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது விசாரணைக்கு வருகை தந்திருந்த படைச்சிப்பாய் ஒருவர், விசாரணையில் அதிருப்தியடைந்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு விசாரணையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார்.
இதனையடுத்து எலிகளைக் கொல்லும் இரசாயன மருந்தொன்றை உட்கொண்ட அவர், மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு, குறித்த படைச்சிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், இதுவரை அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் தொடர்பில் சிப்பாய்கள் அதிருப்தியுற்று, முறைப்பாடுகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கும் சம்பவங்கள் அதிகரி்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet0.html
போலி அபிவிருத்தியின் பின்னணியில் ஆட்சியாளர்கள் நாட்டை சுரண்டுகின்றனர்– சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:36.45 AM GMT ]
கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஊழல் மோசடிகளை விரட்டியடிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி வரும் ஆட்சியாளர்கள் ஊழல்மேசாடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது.
ஏனைய தேர்தல்களைப் போன்றே ஊவா தேர்தலுக்கு முன்னதாகவும் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet1.html
அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப அவுஸ்திரேலியா திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:40.15 AM GMT ]
இது பற்றி கம்போடியாவின் எதிர்க்கட்சித் தலைவரொருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று தகவல் அறிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்தி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவுரு தீவில் உள்ள தடுப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை கம்போடியாவின் ப்ரீயாஹ் சிஹானூக் மாநிலத்தில் தங்க வைப்பது பற்றி ஆராய்வதற்காக அவஸ்திரேலிய அதிகாரிகள் பல இடங்களை பார்வையிட்டு வருவதாகவும் அந்த பத்திரிகை அறிவித்துள்ளது.
இந்த மாநிலத்திலுள்ள பல தீவுகள் கம்போடிய அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கியமான புள்ளிகளுக்கு சொந்தமானவையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
அவுஸ்திரேலியாவின் பொறுப்பிலுள்ள அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்பி வைப்பதற்கு வழிவகுக்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் விரைவில் கைச்சாத்திடக் கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின் ரகசியதன்மை குறித்து கம்போடிய மனித உரிமைகளுக்கான அமைப்பொன்று கரிசனை வெளியிட்டுள்ளது.
அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கு திட்டமிடும் பகுதியில் போதிய வசதிகள் இல்லை என்பது கரிசனைக்குரிய பிரதான விடயமாகும்.
இந்த நிலையில் இரு நாடுகளும் வெளிப்படைத்தன்மை சார்ந்த அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணான விதத்தில் செயற்படுவதாக கம்போடிய மனித உரிமைகள் செயற்பாட்டுக் குழு என்ற அமைப்பு சாடுகிறது.
அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கையாளும் விதம் மிகவும் ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது.
அவுஸ்திரேலியா அரசாங்கத்துக்கு அகதிகளை, தான் நினைத்த படி கையாளும் உரிமை இருக்கின்றதா என்பது ஒரு மிகவும் உண்ணிப்பாக பார்க்கக் கூடிய விடயமாக உள்ளது.
அகதிகள் சட்டம் ஒன்று சொல்கின்றது, அவுஸ்திரேலியா ஒன்று செய்கின்றது இவ்வாறு செய்கின்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் தங்களால் அகதி அந்தஸ்து கொடுக்க முடியாத அகதிகளை, அகதி அந்தஸ்த்து வழங்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஏன் மறுக்கின்றது?
அதே நேரத்தில் அப்பாவி அகதிகளை நடுக் கடலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கும் அவர்களை மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கும் அதிகாரமும் இருக்கின்றதா? என்ற ஒரு பாரிய கேள்வி இருக்கின்றது.
இந்த அகதிகள் விடயத்தில் சர்வதேச விசாரணை ஒன்று செய்வதற்கான காலம் கை கூடுமா? இல்லை, சர்வதேச அகதிகள் அமைப்புதான் உதவுமா?, எது என்ன நடந்தாலும் நாளுக்கு நாள் அகதிகள் மன ரீதியக மரணித்துக் கொண்டே இருக்கின்றர்கள்.
உலகத்தில் உள்ள எந்த மனிதனுக்கும் அவுஸ்திரேலியா அரசாங்கம் செய்யும் இந்த கடும்போக்கு தன்மையானது மிகவும் வேதனையளிக்கும்.
இன்று அகதிகள் என்று சொல்வதை விட அடிமை என்பதே இன்றைய அவுஸ்ரேலிய அகதிகளின் நிலை.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet2.html
Geen opmerkingen:
Een reactie posten