தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

மோசமான மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 13வது இடம்! 25வது இடத்தில் கோத்தபாய! 48ல் பசில்!

இடி தாங்கியை ஒரு கோடி ரூபாவுக்கு விற்க முயன்ற நபர் கைது- போதைப் பொருள் வர்த்தகர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:48.58 AM GMT ]
200 வருடத்திற்கு பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இடி தாங்கி ஒன்றை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை கம்பளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் காரில் இடி தாங்கியை ஹட்டனிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லும் போது, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் வந்த காரை இன்று அதிகாலை 1 மணியளவில் பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக இடிதாங்கி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், இடி தாங்கியையும் கைப்பற்றி கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரையும் இடி தாங்கி மற்றும் காரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
இலங்கையின் போதைப் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பாகிஸ்தான் பிரஜையை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
சகீர் அஹமட் என்ற இந்த சந்தேக நபர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கை சென்றிருந்தார்.
இவர் சீதுவ பிரதேசத்தில் தங்கியிருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர், ஒருகொடவத்தை சுங்க திணைக்கள கொள்கலன் பிரிவில் கைப்பற்றப்பட்ட 93 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட 59 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரஜை தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu1.html

மோசமான மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 13வது இடம்! 25வது இடத்தில் கோத்தபாய! 48ல் பசில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 09:20.58 AM GMT ]
வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்ச சகோதரர்கள் இடம்பிடித்துள்ளனர். தற்போதைய நிலைவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்ச 13வது இடத்திலும் உள்ளனர்.
இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஷ்யாவின் ஸ்டாலின். 2வது இடத்தில் ஹிட்லர் இருக்கிறார்.
ரேங்கர் என்ற இணையத்தளம் இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.
அதில் பலரும் ஒன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்சே 13வது இடத்திலும் உள்ளனர்.
வரலாற்றிலேய மிகவும் மோசமான, அதி மோசமான, பயங்கரமான, சர்வாதிகரமான மனிதர்களை இதில் பட்டியலிட்டுள்ளதாக இந்த இணையத்தளம் கூறுகிறது.
இந்தப் பட்டியலில் மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரிகள், மனநல பாதிப்பால் தொடர் கொலைகளைச் செய்தவர்கள், மதத் தலைவர்கள், கொடூரமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். வாக்களிக்கலாம். உலகின் மிகவும் மோசமான மனிதராக, முதலிடத்தைப் பிடிக்கும் நபர் அறிவிக்கப்படுவார்.
ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில் ஜெர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம்பெற்றுள்ளார்.
லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர் ஹிட்லர். அதேபோல சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4வது இடத்தில் இருக்கிறார். அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5வது இடத்திலும், சீனத்து மா சே துங் 6வது இடத்திலும் உள்ளனர்.
வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7வது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8வது இடைத்தைப் பிடித்துள்ளார்.அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.10வது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.
இலங்கையின் இனப் படுகொலை சர்வாதிகாரி ராஜபக்சவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது. இவர் வேகமாக மேலே வந்து கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜபக்சவின் தம்பி கோத்தபாயவுக்கு இந்தப் பட்டியலில் 25வது இடம் கிடைத்துள்ளது.
சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது. அவர் 29வது இடத்தில் இருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி" - இந்தப் பெயர் 31வது இடத்தில் இடம்பெற்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.
நம்ம சுப்பிரமணியம் சுவாமிக்கும் கூட இங்கு இடம் கிடைத்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இடம் 34 ஆகும்.
ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்ச 48வது இடத்தில் இருக்கிறார். பல ஆயிரம் கோடி சொத்துக்களை இவர் குவித்துள்ளதாக அதில் குறிப்புள்ளது.
ராஜபக்சேவை இந்த இணையத்தளத்தில் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். மிகவும் மோசமான மனிதராக திகழும் ராஜபக்சவை பட்டியலில் முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாகவும் இணைத்யதளம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu3.html

Geen opmerkingen:

Een reactie posten