ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான விபரங்கள், தடங்கள், தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் வழங்குவதே தற்போதுள்ள சவால் என கனேடிய லிபரல் கட்சியின் வேட்பாளராக தெரிவுவாகியுள்ள ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park ) தொகுதி லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்றுள்ளார்.
இந்தநிலையில், அவர் லங்காசிறி வானொலிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
கடந்த 5 வருடங்களாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி மேற்கொண்ட முனைப்பின் பயனாக இந்த சர்வதேச விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் உட்பட பலர் ஒன்று கூட்டி போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள், தடயங்கள் மற்றும் தகவல்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரிரு வாரங்களுக்குள் அவற்றை வெளிக்கொண்டு வர முடியும் என தாம் நம்புவதாகவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.