எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காகத் தமிழ் தரப்பினை வலை வீசி பிடிக்கும் நடவடிக்கைகளை அரச தரப்பு முடுக்கிவிட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட கார் கையில் காசென இப்பேரங்கள் அமைவதாக தெரியவருகின்றது. அரச தரப்பின் ஆசீர்வாத்துடன் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை இலக்கு வைத்து இத்தகைய பேரம் பேசல்கள் நடந்துவருவதாகவும் தெரியவருகின்றது.
ஏற்கனவே கிழக்கில் இத்தகைய பேரம்பேசல்களின் தொடர்ச்சியாகவே கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலர் ஆளும் தரப்புடன் இணைந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது வடக்கினில் ஆட்களை வலைவீசிப்பிடிக்கும் முயற்சியில் அரச தரப்பு களமிறங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியினையும் அத்தரப்புக்கள் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/88514.html
Geen opmerkingen:
Een reactie posten