[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 08:41.08 AM GMT ]
கிளிநொச்சி ஜெயந்திநகர் அம்மன் ஆலயத்தில் மலையகம் கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவினால் மரணித்த மக்களுக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் சுடரேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கட்சியின் ஜெயந்திநகர் செயற்பாட்டாளரும் சமூக சேவகருமான சந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர் மகேஸ்,
வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூர்யா. மாற்றுவலுவுள்ளோர் அமைப்பின் இணைப்பாளர், சாந்தி கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மக்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.
மேலும், மரணித்த மக்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண சபையின் விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
நூற்றாண்டுகளாக அடிமை வாழ்வை சுமந்துநிற்கும் உறவுகளாக மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இன்றுவரை துன்பங்களை சுமந்து வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர்.
இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்கள் வியர்வையால் காலாதிகாலமாக பெரும் பங்களிப்பை ஆற்றிவரும் இந்த மலையக மக்களுக்கு இயற்கையாலும் பாதுகாப்பற்ற வாழ்வு அமைந்து மீரியபெத்த கொஸ்லாந்த துன்பம் வரை கொண்டுசென்றுள்ளது.
மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது சமுகம் பற்றிய விழிப்புண்வை ஏற்படுத்த முனைகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கங்களால் அவர்களின் புரட்சிகர எண்ணங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கிலே நடந்த புரட்சிகர போராட்திலே ஏராளம் மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள்.
ஆகவே இடர்களின் மேல் வாழந்துவரும் மலையக மக்களுக்கு ஒரு சூரியன் உதிக்க வேண்டுமென இன்று ஏக்கம் இருக்கின்றது.
அம்மக்களின் உணர்வு எங்களுடைய உணர்வு.அவர்கள் நாங்களும் இரண்டற கலந்தவர்கள் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlxz.html
மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 09:08.51 AM GMT ]
அமைச்சர் வீரவன்ஸ சார்பில் தமது அமைப்பை மகிந்தவுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாதென தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெரும்பான்மையான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வமைப்பு சார்பாக மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமது தரப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ஸ, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் கெஞ்சியதாக தேசியப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெயரில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் வீரவன்ஸ உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், கலாநிதி குணதாச அமரசேகரவுடன் இணைந்து வேறு ஒரு அமைப்பை தொடங்கிய அமைச்சர் வீரவன்ஸ, மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறி ஊடக கண்காட்சியை ஒன்றை நடத்திய போதிலும் வெறும் 5 பேர் மட்டுமே அந்த கண்காட்சியை பார்வையிட சென்றிருந்தனர். இதனால், புதிய அமைப்பின் செயற்பாடுகள் ஆரம்பித்திலேயே முடங்கி போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx0.html
தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 09:23.08 AM GMT ]
இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியானது பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை காணப்படுகிறது. ஊழல்களில் ஈடுபடுபவர்களும், குற்றம் புரிபவர்களும் இந்த அரசினால் அரசினால் பாதுகாக்கப்படுகின்றனர்.
இதனால் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்த நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை தற்போதைய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்ததால், தான் உள்ளிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்ற குழுவினர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டினார்.
சிரேஸ்ட பிக்குகள், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்பதால் அவரால் நினைத்த அளவு சிங்கள, பௌத்த வாக்குகளைப் பெற முடியாது.
தற்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்சவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாகத் தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx1.html
Geen opmerkingen:
Een reactie posten