தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

சந்திரிக்காவும் மைத்திரியும் நேரடியாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை?

மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது - நுகேகொடயில் 7 பெண்கள் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 05:08.15 AM GMT ]
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி வளைப்புக்களிலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதானவர்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவதாக ஜொகூர் பொலிஸ் தலைமை அதிகாரி முகமது மொக்தார் முகம்மட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
இதன்படி கைதானவர்களில் 102 உள்நாட்டவர்கள், 627 சீனர்கள், வியட்னாமைச் சேர்ந்தவர்கள்- 1,341, தாய்லாந்து- 555, இந்தோனேஷியா- 229, காம்போடியா- 13, பிலிப்பைன்ஸ்-62, மியன்மார்- 16, சிங்கப்பூர்- 1, லாவோஸ்- 4, இலங்கை- 6, இந்தியா- 29 மற்றும் வெனிசுவெல-1  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் விபச்சாரம் – 7 பெண்கள் கைது
நுகேகொட நாவல பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அதில் இருந்த 7 பெண்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அந்த நிலையத்தின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 24 மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனுராதபுரம், காலி, பன்னலை, இம்புல்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo3.html
சந்திரிக்காவும் மைத்திரியும் நேரடியாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:45.57 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும்,  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகவே ஆளும் கட்சி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 18 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவினை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சில சிரேஸ்ட அமைச்சர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அமைச்சர்களுடன் பேசி வருகின்றனர்.
முதலில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பலரை மீள இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சிலரை இரகசியமாக சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp0.html

Geen opmerkingen:

Een reactie posten