தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?

இழிவான அரசியல் கலாசாரம் மாற்றப்படும்!– சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:37.06 AM GMT ]
நாட்டில் அமுலில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்து இழிவான அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தேர்தல் முறை காரணமாக நாட்டின் அரசியலுக்கு இழிவானதும் வெட்கமானதுமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்ற விருப்பமா என்று நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டோம். அதனை மாற்ற அவர் இணங்கினார்.
அரசியல்வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கலாசாரம் கொண்டு வரப்பட வேண்டும் மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினால், அதனை வெளிப்படை தன்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல் இப்படியானதாகவே இருக்கின்றது. இலங்கையை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல வில்லை என்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo7.html

ஜப்­பா­னிய நிபு­ணரின் நிய­மனம் ஆணைக்­கு­ழுவை வலுப்­ப­டுத்­துமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:41.15 AM GMT ]
காணாமற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு ழு­வுக்கு, வெளியிலிருந்து ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக, ஜப்­பா­னிய நிபுணர் ஒரு­ வரை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச நிய­மித்­துள்ளார்.
ஜனா­தி­பதி தேர்தல் பர­ப­ரப்­புக்குள், இந்த செய்தி அவ்­வ­ள­வாக ஊட­கங்­களில் எடு­பட்­டி­ருக்­க­வில்லை.
ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள சூழலில் கூட, தாம் இந்த விவ­கா­ரத்தில் கூடிய சிரத்தை எடுத்துக் கொள்­வ­தாக, ஜப்­பா­னிய நிபுணர் ஒரு­வரை நிய­மித்­துள்­ளதன் மூலம், வெளி­யு­ல­கிற்குக் காட்டிக் கொள்ள முயன்­றி­ருக்­கி­றது அர­சாங்கம்.
ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோசனை வழங்­கு­வ­தற்­காக, பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலை­மை­யி­லான சர்­வ­தேச நிபுணர் குழு­வொன்று கடந்த ஜூலை மாதம் நிய­மிக்­கப்­பட்­டது.
இந்தக் குழுவில், சேர் டெஸ்மன்ட் டி சில்­வா­வுடன், பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த சேர். ஜெப்ரி நைஸ், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பேரா­சி­ரியர் டேவிட் கிரேன், இந்­தி­யாவைச் சேர்ந்த அவ்டாஸ் கௌஷல், பாகிஸ்­தானைச் சேர்ந்த அஹ்மர் பிலால் சூபி ஆகிய ஐந்து பேர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.
இந்த சர்­வ­தேச ஆலோ­சனைக் குழு­வி­லேயே ஆறா­வது உறுப்­பி­ன­ரான ஜப்­பா­னிய நிபு­ண­ரான மோட்டு நுகுசி (Motoo Noguchi) இணைக்­கப்­பட்­டுள்ளார்.
மோட்டு நுகுசி, கம்­போ­டி­யாவில் கெமர் ரூஜ் ஆட்­சிக் ­கா­லத்தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் நீதி­ப­தி­யாக 2006ம் ஆண்டு தொடக்கம், 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணி­யாற்­றி­யவர்.
ஹேக்கில் உள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் செயற்­படும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிதி­யத்தின் பணிப்­பாளர் சபையின் தலை­வ­ரா­கவும் இவர் இருந்­தவர்.
ஜப்­பா­னிய நீதி­பதி மோட்டு நுகு­சியை, வெளி­நாட்டு ஆலோ­சனைக் குழு­வுக்கு இலங்கை அர­சாங்கம் நிய­மித்­துள்­ளது விருப்பின் பேரிலா அல்­லது அழுத்­தங்­களின் பேரிலா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.
இலங்­கையில், சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­காத ஒரு நாடாக ஜப்பான் இருந்து வரு­கி­றது.
உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­மாறு ஜப்பான் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது.
இதன் அடிப்­ப­டை­யில் தான், ஜப்­பா­னிய நிபுணர் ஒரு­வரை ஆலோ­சனைக் குழுவில் நிய­மிக்க இலங்கை அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது.
ஐந்து வெளி­நாட்டு நிபு­ணர்கள் ஆலோ­சனைக்­ கு­ழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்டு, கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்கள் கழித்தே இந்த நிய­மனம் குறித்த அறி­விப்பை அர­சாங்கம் வெளி­யிட்­டுள்­ளது.
ஆனால், ஜப்பான் தரப்பில் இரண்டு நிபு­ணர்­களின் பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யாகி பல மாதங்­க­ளாகி விட்­டன.
ஆனாலும், இழுத்­த­டித்தே இந்த நிய­ம­னத்தை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.
இது விருப்­பத்தின் பேரில் வழங்­கப்­பட்ட நிய­ம­ன­மாக இருக்­காது என்­ப­தையே வெளிப்­ப­டுத்­து­கி­றது.
இலங்­கைக்கு பொரு­ளா­தார ரீதி­யாக ஆத­ர­வ­ளிக்கும் ஒரு நாடு என்ற வகை­யிலும், சர்­வ­தேச ஆத­ரவை ஜப்பான் மூலம் பெற முடியும் என்­ப­தாலும் தான், நீதி­பதி மோட்டு நுகு­சியை ஆலோ­சனைக் குழுவில் நிய­மிக்க அர­சாங்கம் இணங்­கி­யி­ருக்­கி­றது.
ஜப்­பானைப் பொறுத்­த­வ­ரையில், உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை வலுப்­பெ­று­வதை விரும்­பு­கி­றது.
அதற்­கேற்­ற ­வ­கையில், சர்­வ­தேச தரம் வாய்ந்த ஒரு நிபு­ணரை நிய­மிக்க வேண்­டு­மென்ற வகையில் செயற்­பட்­டி­ருக்­கி­றது.
அதனால் தான், அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பணி­யாற்­றிய, கம்­போ­டி­யாவில் போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரித்த சர்­வ­தேச தீர்ப்­பா­யத்தில் பணி­யாற்­றிய நீதி­ப­தியைத் தெரிவு செய்­தி­ருக்­கி­றது ஜப்பான்.
ஆரம்­பத்தில் மூன்று பிரித்­தா­னிய, அமெ­ரிக்க நிபு­ணர்­களை அர­சாங்கம் தன்­னிச்­சை­யா­கவே ஆலோ­சனைக் குழு­வுக்கு நிய­மித்­தி­ருந்­தது.
அதற்கு அந்த நாடு­க­ளிடம் இலங்கை அரசு ஆலோ­சனை கேட்­கவோ, பெயர்­களைப் பரிந்­துரை செய்­யு­மாறு கோரவோ இல்லை.
அதை­ய­டுத்து, பாகிஸ்தான், இந்­திய நிபு­ணர்­களின் பெயர்­களைத் தெரிவு செய்யும் போதும், இலங்கை அர­சாங்கம் அந்­தந்த நாடு­களின் அர­சாங்­கங்­க­ளி­ட­மி­ருந்து பரிந்­துரைப் பட்­டியல் எதையும் பெற்­றி­ருக்­க­வில்லை.
ஆனால், இந்­திய, பாகிஸ்தான் அர­சாங்­கங்­க­ளுடன், நிய­ம­னங்கள் குறித்து ஆலோ­சனை நடத்­தப்­பட்­டி­ருந்­தது.
என்­றாலும், கடை­சி­யாக நிய­மிக்­கப்­ப ட்ட ஜப்­பா­னிய நிபு­ண­ரான மோட்டு நுகுசி விட­யத்தில் அவ்­வாறு நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை.
இவர் ஜப்­பா­னிய அர­சாங்­கத்­தினால், கொடுக்­கப்­பட்ட பட்­டி­யலில் இருந்து தெரிவு செய்­யப்­பட்­டவர். நேர­டி­யா­கவே ஜப்­பா­னிய அரசின் தலை­யீடு இதில் இருந்­தது.
ஜப்­பானின் ஆத­ரவு தேவை என்­பதால் இலங்­கையும், உள்­நாட்டுப் பொறி­முறை வலுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதால் ஜப்­பானும், இந்த நிய­மன விட­யத்தில் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வர நேர்ந்­தது.
எவ்­வா­றா­யினும், நீதி­பதி மோட்டு நுகுசியை நிய­மித்த விட­யத்தில், இலங்கை அர­சாங்கம் அவ்­வ­ளவு திருப்­தி ­கொள்ள முடி­யாது. ஏனென்றால், அவர் ஒரு சர்­வ­தேச தரம் வாய்ந்த நீதி­பதி.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச நிய­மித்த ஏனைய நிபு­ணர்கள், ஒன்றில் மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளா­கவோ, சட்டப் பேரா­சி­ரி­யர்­க­ளா­கவோ, அல்­லது சர்­வ­தேச சட்­டங்­களை அறிந்த சட்­டத்­த­ர­ணி­க­ளா­கவோ தான் இருந்­தி­ருக்­கின்­றனர்.
ஆனால், ஒரு சட்டப் பேரா­சி­ய­ராகப் பணி­யாற்றும் அனு­ப­வத்­தையும், சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்தில் நீதி­ப­தி­யாக இருந்த அனு­ப­வத்­தையும் கொண்­ட­வ­ராக மோட்டு நுகுசி விளங்­கு­கிறார்.
இந்­த­ வ­கையில், ஏனைய ஐந்து நிபு­ணர்­க­ளையும் விட ஜப்­பா­னிய நிபுணர் வலு­வா­னவர் என்றே குறிப்­பி­டலாம்.
என்­றாலும், ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்ட வெளி­நாட்டு ஆலோ­சனைக் குழு­வினர், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு எந்­த­ள­வுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் என்ற கேள்வி உள்­ளது.
அவர்­களை ஜனா­தி­பதி ஆணைக்­குழு தமது தேவைக்­கேற்ப, விரும்­பினால் பயன்­ப­டுத்த முடியும்.
ஜனா­தி­பதி ஆணைக்­குழு அந்த நிபு­ணர்­களை விசா­ர­ணை­களில் பங்­கேற்று வி­டாமல் ஒதுக்கி வைத்து, தமக்கு ஏதேனும் சட்ட ஆலோ­ச­னைகள் தேவைப்­பட்டால் தொடர்பு கொள்­கிறோம் என்று கூறி அனு ப்பி வைத்­து­விட்­டது.
ஆக, ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைக் குழு­வினர், விசா­ர­ணை­களின் முன்­னேற்­றத்­துக்கு காத்­தி­ர­மான எந்தப் பங்­க­ளிப்­பையும் செய்­ய­வில்லை.
நியா­ய­மான முறையில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கி­றதா, அது எந்­த­ள­வுக்கு நம்­பக­மா­ன­தாக இடம்­பெ­று­கி­றது என்­பதைப் பார்­வை­யிடக் கூடிய சந்­தர்ப்­பங்­களும் கூட அவர்­க­ளுக்கு அளிக்­கப்­ப­ட­வில்லை.
இது ஜப்பான் போன்ற நாடு­க­ளுக்கு ஏமாற்­றத்தை அளிக்கும் விட­ய­மா­கவே இருந்து வரு­கி­றது.
கடந்­த­ வாரம் மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலையம் வெளி­யிட்ட 12 பக்க அறிக்கை ஒன்றில், காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு, கட்­ட­மைப்பு ரீதி­யான குறை­பா­டு­களைக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்­டுள்ளது.
நம்­ப­க­மான விசா­ர­ணைகள் நடப்­பது உறுதி செய்­யப்­ப­டா­விட்டால் சர்­வ­தேச விசா­ர­ணைகள் அவ­சியம் என்ற கருத்தை வலுப்­ப­டுத்தும் என்றும் அதில் கூறப்­பட்­ டுள்­ளது. ஆனால், அர­சாங்கம் அது­பற்றி அக்­கறை எடுத்துக் கொண்­ட­தா­கவே தெரி­ய­வில்லை.
காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­விடம் இது­வரை 20 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்றில் 10 வீதம் கூட இன்­னமும் சாட்­சியம் பெறப்­ப­ட­வில்லை.
சாட்­சிப்­ ப­தி­வுக்­காக, ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளிலும் அமர்­வு­களை நடத்­தும்­ போது, அழைக்­கப்­பட்­ட­வர்­களை விடவும் அதி­க­மாக புதிய முறைப்­பா­டுகள் தான் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.
கடந்­த­வாரம் வவு­னி­யாவில் நடந்த அமர்வில் 179 சாட்­சி­க­ளிடம் சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்ட நிலையில் புதி­தாக 328 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
ஆக, காணா­மற்­போனோர் குறித்த முறைப்­பா­டுகள் அதி­க­ரித்து வரு­கின்ற போதும், விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, இந்தப் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைப்­ப­தற்கு போதிய நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி ல்லை.
அதை­விட, நம்­பகம் வாய்ந்­தது என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முற்­றிலும் நம்­பக்­கூ­டிய வகை­யிலும், ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களும் அணு­கு­மு­றை­களும் அமைந்­தி­ருக்­க­வில்லை.
இத்­த­கைய நிலையில், சர்­வ­தேச நிபு­ணர்­களின் உத­வியை பெற்­றி­ருப்­ப­தாக அர­சாங்கம் பிர­சாரம் செய்­தாலும், அவர்கள் ஏனோ தானோ என்று தான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
அவர்­களின் நிபு­ணத்­துவ ஆலோ­சனை தேவைப்­பட்டால் பெற­மு­டியும் என்ற அளவில் தான் நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஏற்­க­னவே இது­வி­ட­யத்தில் இந்­திய மனித உரிமை ஆர்­வலர் அவ்டாஸ் கௌஷல் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்ளார்.
இந்நிலையில் ஜப்­பா­னிய நிபு­ணரை அர­சாங்கம் நிய­மித்­துள்­ளது.
இது ஜப்­பானைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்வே தவிர, ஆணைக்­கு­ழுவை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்­வாகக் கரு­த­மு­டி­யாது.
ஆனால், ஒரு விட­யத்தை இலங்கை மறந்­து­விட முடி­யாது.
ஜப்­பா­னிய நீதி­பதி மோட்டு நுகுசி சாதாரணமான ஒருவரல்ல.
அவர், தான் சர்வதேச அளவில் பணியாற்றிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அந்தப் பொறிமுறைகள் குறித்த எழுத்து மூலமான ஆவணங்களை வெளியிட்டு வருபவர்.
கம்போடிய போர்க்குற்ற விசாரணை குறித்தும், அனைத்துலக நீதிதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் வேறு பல விடயங்கள் குறித்தும் அவர் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளவர்.
அவை, சர்வதேச பொறிமுறைகள் கட்டமைப்புகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இலங்கை அரசாங்கம், வெறும் கறிவேப்பிலையாக அவரைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தால், அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தும், விசாரணைக்கு உதவுவதற்காக, சில்வியா கார்ட் ரைட் என்ற நியுசிலாந்து நீதிபதி ஆலோசனை வழங்கும் நிபுணராக இருக்கிறார்.
அவரும் கம்போடிய தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றியவர்தான்.
அதற்குப் போட்டியாக, மோட்டு நுகுசி நியமிக்கப்பட்டாலும் கூட, இவரை எதற்காக நியமித்தோம் என்ற ஒரு காலத்தில் இலங்கை வருத்தப்படும் நிலை ஏற்படலாம்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmszCRVKajpy.html
திருகோணமலை விபத்தில் இருவர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:45.09 AM GMT ]
திருகோணமலை மாவட்டம் மூதூர் மற்றும் உப்புவெளி பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மூதூர் பச்சனூர் பிரதேசத்தின் 64 வது மைல் கல் பகுதிக்கு அருகில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் அதன் சாரதி பலியானார்.
பஸ்ஸில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்றகால நிலைய காரணமாக வீதியின் உராய்வு தன்மை குறைந்துள்ளதால்,பஸ் வழுக்கி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதேவேளை உப்புவெளி பிரதேசத்தில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajpz.html
சந்திரிக்காவும் மைத்திரியும் நேரடியாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:45.57 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும்,  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகவே ஆளும் கட்சி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 18 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவினை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சில சிரேஸ்ட அமைச்சர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அமைச்சர்களுடன் பேசி வருகின்றனர்.
முதலில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பலரை மீள இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சிலரை இரகசியமாக சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp0.html
மைத்திரிபாலவுக்கு எந்த தரப்பும் உச்ச ஆதரவை வழங்கவில்லை: எஸ்.பி.திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:50.13 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த தரப்பும் தமது உச்சப்பட்ச ஆதரவை வழங்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி பாடுபட்ட வேலை செய்வதில்லை. ஜே.வி.பி அவருக்கு ஆதரவாக எதனையுமே செய்வதில்லை.
ஓரமாக இருந்து ஆதரவை வழங்கி வருகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து சென்றவர்களில் இரண்டு பேரை தவிர ஏனைய அனைவரும் அரசாங்கத்திற்கு திரும்பினர்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியது.
இம்முறை அந்த கட்சியினரும் பொது வேட்பாளருக்காக தேர்தல் பணிகளை செய்வதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கின்றது. கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கு கடுமையாக உழைத்தது.
இம்முறை அவர்களும் இல்லை. இதனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சந்திரிக்கா மாத்திரமே இருக்கின்றார்.
இதனால், பொன்சேகாவை விட மைத்திரிபால படுதோல்வியடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp1.html
மக்கள் சக்தியை விடவும் பெரிய சக்தி எதுவும் கிடையாது: மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 07:08.48 AM GMT ]
மக்கள் சக்தியை விடவும் பெரிய சக்தி எதுவும் கிடையாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் உடுநுவரெ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரம், பண பலம், குண்டர் கூட்டங்களின் அதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
எனினும், இந்த அனைத்து சக்திகளை விடவும் மக்கள் சக்தி வலுவானது என்பது எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி வெளிச்சமாகிவிடும்.
தற்போதைய அரசாங்கம் மாநாயக்க தேரர்கள், அரச அதிகாரிகள், அமைச்சர்கள் கூறும் அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பதில்லை.
வீட்டில் உள்ள சிறிய இளவரசர் கண்டியில் கார் பந்தயம் வைக்க வேண்டுமென தந்தையிடம் கோரியவுடன், மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காது கண்டியில் கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
வடக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனைவரும் வரவேற்பை வெளியிட்டனர்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ மீற்றர் அமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதனை அமைச்சர் டலஸ் அழப்பெரும முன்மொழிந்திருந்தார்.
எனினும் திட்டத்திலிருந்து அமைச்சர் அழப்பெருமவை நீக்கி புதிய திட்டமொன்று உருவாக்கப்பட்டது. அதற்கு அமைய ஒரு கிலோ மீற்றர் அமைக்க 340 மில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. சட்டம் நிலைநாட்டப்படும் என கூறும் அரசாங்கம் வீதி ஓரங்களில் பாரியளவில் கட் அவுட்களை வைத்துள்ளது.
இப்படி கட்அவுட் வைப்பது சட்டத்தை பாதுகாப்பதாக அமையுமா என மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp3.html
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 07:28.32 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மேற்குலக நாடொன்று தாக்கம் செலுத்தி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது
முக்கியமான மேற்குலக நாடொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரை கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக சந்தித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாடு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென்ற நோக்கில் குறித்த மேற்குலக நாடு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கூட்டமைப்பிற்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எதனையும் கைச்சாத்திடாது, நம்பிக்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாட்டை குறித்த மேற்குலக நாடு செய்துள்ளதாகவும், மேற்குலக நாடு மத்தியஸ்தம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதி நேரத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த போதிலும், கீழ் மட்ட அளவில் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரித்துள்ளது.
இதன் ஓர் கட்டமாக அண்மையில் ஆலையடி வேம்பில் மாவை சேனாதிராஜ உள்ளிட்டவர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கூட்டமொன்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp5.html

Geen opmerkingen:

Een reactie posten