தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

நாட்டின் முக்கியமான சில பகுதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க சிஐஏ சதியாம்…

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய, அமைச்சர்கள், டிலான் பெரேரா மற்றும், மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர், நாட்டைக் குழப்பவும், கட்சிகளை உடைப்பதற்கும், மேற்குலக நாடுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
“சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு மேற்குலக சக்திகள் தம்மைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கூட, புரிந்துகொள்ளும் திறன் மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவை வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டே, மேற்குலக சக்திகள் மைத்திரிபால சிறிசேனவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
தமது இராணுவ அரசியல் இலக்குகளை அடைவதற்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவர் அமைப்பு (சிஐஏ) பல்வேறு சக்திகளைப் பயன்படுத்துவது வழக்கம்” என்றும் சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90614.html

வடக்கின் பிரச்சாரத்தில் இராணுவம்

குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் அரசியல்வாதிகள் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தொடர்பாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த கண்காணிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்
‘வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் பிரதேச அரசியல்வாதிகளுடன் கலந்து கொண்ட அரசியல் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இராணுவ முகாமுக்குள் உள்ளுர் அரசியல்வாதிகளை அழைத்துச் சென்று அரசியல் கூட்டம் நடத்தப்பட்ட சம்பவமானது, இப்போது நடைபெறவுள்ள தேர்தல் நடைமுறைகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமையும் என நாங்கள் கருதுகின்றோம். நேற்றைய தினமே இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகவே தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தோம்’ என்றார் கீர்த்தி தென்னக்கோன்.
‘வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மேற்கு மாகாணத்திலும் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தொடர்பாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கெபே அமைப்பு கூறுகிறது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரைப் பயன்படுத்துவதையோ, இராணுவத்தினர் மத்தியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களமே பொறுப்பு கூற வேண்டும்’ என்றார் கீர்த்தி தென்னக்கோன்.
இந்த விடயம் தொடர்பாக தங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட், தேர்தல் சட்டமீறல் சம்பவம் ஒன்று இடம்பெறுமானால், அது குறித்து, அந்தப் பிரதேசத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு நிலையத்திற்கு உடனடியாக முறையிட வேண்டும் எனவும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களத்திற்குத் தெரிவித்தால், அந்தச் சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறில்லாமல், தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்தால், சம்பவம் நடைபெறுகின்ற இடத்தில் உடனடியாக விசாரணைகளை நடத்துவது இயலாத காரியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதோ, அவர்கள் மத்தியில் அரசியல் பிரசார நடவடிக்கைளை மேற்கொள்வதோ சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/90617.html

நாட்டின் முக்கியமான சில பகுதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்…

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக தெரிவித்து வந்த அரசாங்கம், தற்போது புலிகள் நிர்வாக ரீதியாக இயங்குவதாக தெரிவித்து வருகின்றது. இது தேர்தலுக்கான பொய்யான பிரசாரம்.
நாட்டின் முக்கிய பகுதிகளில் சிலவற்றில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டிவருகின்றது. அது குறித்து நமக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும் இது குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தேர்தல் ஆணையாளர் சாதாரணமான ஒரு தேர்தலை நடத்தி நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் இதன் போது கோரிக்கைவிடுத்திருந்தார்.
http://www.jvpnews.com/srilanka/90620.html

Geen opmerkingen:

Een reactie posten