தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை!- ருவிற்றரில் ரணில்

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பிரதிநிதியாக தமிழர் நியமிப்பு
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 07:02.51 AM GMT ]
வருகின்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதியாக கணபதிப்பிள்ளை மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதியாக மட்டக்களப்பு செங்கலடி வர்த்தக சங்கத்தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை நியமித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட மோகனை அக்கட்சியின் தமிழர் பிரதிநிதியாக இன்று உத்தியோக பூர்வமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
பிள்ளையான் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து விலகி கொண்ட மோகன்  நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக நேற்றைய எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalr4.html
ராஜபக்ஷவினர் என்ன தேசப்பற்றாளர்களா?: ராஜித கேள்வி
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 07:08.48 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை அனுப்பிய குமரன் பத்மநாதனை தம்முடன் வைத்திருக்கும் ராஜபக்ஷவினர் தம்மை தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கருணா அம்மான் இருந்து வருகிறார். இப்படியானவர்களை வைத்திருப்போரே தேசப்பற்று பற்றி பேசுகின்றனர்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரிந்த தேசப்பற்று என்று ஒன்றுள்ளதா?. அவர் அமெரிக்காவில் இருந்து வந்தாரே அன்றி, எப்போது அவர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
நானும் மங்கள சமரவீரவுமே மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்கு உதவினோம். ஒவ்வொரு காலங்களில் நாங்கள் அவருக்கு அரசியல் ரீதியான உதவிகளை வழங்கியுள்ளோம்.
மகிந்த ராஜபக்ஷ, பாத யாத்திரை செல்லும் போது கோத்தபாய, பசில் போன்றவர்கள் இருந்தனரா?. நாமல் உட்பட அவரது குடும்பத்தில் எவரும் அப்போது மகிந்த ராஜபக்ஷவுடன் இருக்கவில்லை.
அரசியலுக்கு சென்று விசர் கூத்தாடுவதாக அவரது குடும்பத்தினர் அப்போது மகிந்தவை சாடினர். நாங்கள் அப்படியான பேச்சுகளை பேசுவதில்லை.
பாதயாத்திரை செல்லும் போது, மனித சங்கிலி போராட்டம் நடத்தும் போது மகிந்தவுடன் கோத்தபாய இருந்தாரா?.
மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னரே கோத்தபாய ராஜபக்ஷ போன்றவர்கள் அமெரிக்காவில் இருந்து கணக்கு பார்த்து இலங்கை வந்தனர்.
கோத்தபாயவுக்கு என்ன அரசியல் தெரியும். அவரது ஒரு அமைச்சின் செயலாளர். அவரே அரச சேவையை இந்த கீழ் நிலைமைக்கு கொண்டு சென்றார்.
அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்றால், அவர் அதற்கு ஏதுவான விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.பாதுகாப்பு அமைச்சு பற்றி அவர் எதனையும் பேசலாம். ஆனால் அரசியல் மேடைகளில் ஏற முடியாது.
கோத்தபாய கொலன்னாவவிற்கு சென்று ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளர்களுடனும் அரசியல் செய்தார். அவர்களின் வீடுகளுக்கு சென்று உணவும் உட்கொண்டுள்ளார். அவர் அதனை என்னிடமே கூறினார்.
குற்றச்சாட்டு எழுந்த போது, போதைப் பொருள் விற்பனையாளர்கள் என்பதை அறியாது தான் சென்று விட்டதாக என்னிடம் கூறினார். ஏன் அப்படி தெரியாமல் செல்ல வேண்டும். அவருக்கு அரசியல் தெரியாது என்பதே இதற்கு காரணம்.
இப்படி அரசியல் எது என்பதை அறியாத கோத்தபாய எப்படி தேசத்துரோகி தேசப்பற்றாளர் என்று வரையறை செய்ய முடியும். தேசப்பற்றாளர் என்றால் யார் என்று அவரிடம் விளக்கம் கேளுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ள முடியும் என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalr5.html
அநுர பிரியதர்சன யாப்பாவின் மைத்துனரும் எதிரணியில் இணைவு!
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 07:55.09 AM GMT ]
அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவின் மைத்துனரும், பத்தேகம அமைப்பாளருமான சட்டத்தரணி ஆனந்த அபேவிக்கிரம, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வந்துள்ளார்.
முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரான இவர் பத்தேகமயில் மைத்திரிக்கு ஆதரவாக பிரசாரங்களையும் முன்னெடுத்திருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalr7.html
சந்திரிக்கா, ரணில், மைத்திரி ஆகியோர் சர்வதேச சதிகாரர்களின் பிடியில்: குணதாச அமரசேகர
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 08:32.37 AM GMT ]
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 50 வீத வாக்குகளை பெற முடியாத நிலைமை ஏற்பட்டால், இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவதற்கு முன்னர் மக்களுடன் வீதியில் இறங்கி போராட எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரள்ளையில் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்புகளின் நடவடிக்கை மத்திய நிலையத்தை நேற்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிமானிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை கருதமுடியும்.
தவறியேனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால், நாடு அராஜக நிலைமைக்கு செல்லும்.
உள்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்து கொள்ள முடியும்.
ஆனால், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையை தீர்ப்பது மிகவும் கடினமதாக மாற வாய்ப்புள்ளது.
இதனால், இந்த சதிகாரர்களிடம் இருந்து நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் வெளிநாட்டு சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
சர்வதேச சதிகார்களின் பிடிக்குள் சிக்கியுள்ள சந்திரிக்கா, ரணில், மைத்திரி அணி நாட்டை தவறாக வழிநடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது எனவும் அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmszCScKals0.html
தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை!- ருவிற்றரில் ரணில்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 09:22.24 AM GMT ]
தமிழ் மக்கள் தங்களின் அரசியல் தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கக தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி, இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா அவர்கள் ருவிற்றரில் கேள்வியொன்றினைத் தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்குறித்த கூற்றினை சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் தடையாக உள்ள சிறிலங்காவின் 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கினால், பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை எழும். அதற்கு 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்குவீர்களா என ரணில் விக்கிரமசிங்விடம் மறுகேள்வியினை உசா சிறீஸ்கந்தராஜா ருவிற்றரில் தொடுத்த போது ரணில் விக்கிரமசிங்க பதில் எதனையும் அளிக்கவில்லை.
நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர் மக்கள் பங்கு கொள்ளும் பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கையினை, அனைத்துலகத்திடம் முன்வைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCScKals4.html

Geen opmerkingen:

Een reactie posten