தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

ஜனநாயக சக்தியினூடாக பிரச்சினைக்குத் தீர்வு காண வழி பிறக்கும் என எதிர்பார்க்கிறோம்!- சுமந்திரன் எம்.பி.!

வன்னி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் றிஷாத்
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:36.01 PM GMT ]
ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆதரவாளர்களிடம் கருத்துக்களை அறியும் விஷேட பொதுக்கூட்டமொன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
நிகழ்வில் தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
தனிநபராக இருந்து கொண்டு இந்த மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்தியை விடவும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை கூடவே அழைத்துச் சென்றால் செய்த அபிவிருத்தியை விடவும் மேலும் பல அபிவிருத்திகளைச் செய்த முடியும்.
இந்த நம்பிக்கையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் என்னுடன் சேர்ந்து ஹூனைஸ் பாருக்கையும் நானே வேட்பாளராக களமிறக்கி எனக்கு மாத்திரம் வாக்களிக்காமல் அவருக்கும், நான் உட்பட மற்றய வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் அன்று கேட்ட போது எதுவிதமான மறுப்புக்களையும் தெரிவிக்காமல் நீங்கள் எங்கள் மூவருக்கும் வாக்களித்தீர்கள்.
அவ்வாறு நீங்கள் வாக்களித்து எனக்கு அடுத்து தெரிவான ஹீனைஸ் எம்.பி கட்சிக்கும், எனக்கும் சொல்லாமல் இரவோடு இரவாக எதிரணியோடு இணைந்து கொண்டுள்ளார்.
எனவே, நான் சொன்னதைக் கேட்டு வாக்களித்தவர்கள் என்னைக் கண்டு எமது மாவட்டத்திற்கு விமோசனத்தைப் பெற்றுத்தருவார் என்று நம்பி நீங்கள் சொன்னதற்கு இணங்க அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நாங்கள் வாக்களித்தோம்.
ஆனால் அவர் இப்படி பிழையான முடிவை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று வன்னி மாவட்டத்திலுள்ள மக்கள் பலர் என்னிடம் வந்து ஆதங்கப்பட்டார்கள்.
எனவேதான் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கு வாக்களித்த மக்களிடம் அவர் செய்த பிழையான முடிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன்.
இன்று நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எமது கட்சியின் ஆதரவாளர்களிடையே ஆலோசனைகளைக் கேட்டு எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
யுத்தத்தினால் முற்றாக அழிந்து போன எமது முல்லைத்தீவு மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களைப் போல கல்வி, சுகாதாரம், வீதி, மின்சாரம், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அபிவிருத்தியில் முன்னேற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக அன்று எதிர்க்கட்சிகளுடன் இருந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் என்னுடன் இணைந்து கொண்டார்கள்.
அவர்களின் இணைவானது எமது கட்சிக்கு மேலும் பலத்தை சேர்த்தது. இனவாதம், மதவாதம், பிரதேசவாதங்களுக்கு அப்பால் செயற்படும் எமது கட்சியானது ஒரு ஜனநாயகக் கட்சியாகும்.
கட்சியிலுள்ளவர்களினதும், கட்சியின் போராளிகளினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று செயற்படும் கட்சியாகும்.
போரினால் முற்றாக அழிந்து போன இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்தது மட்டுமன்றி, படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கிய, எமது பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவையா ஆதரிப்பது அல்லது அவருடன் சேர்ந்து கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து எமது கட்சி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt0.html
சீனக்கப்பல்கள் அந்நியச் செலாவணியை செலுத்தவில்லை! புதிய கடற்றொழில் அமைச்சர்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 12:44.00 AM GMT ]
இலங்கைக் கொடியுடன் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் எட்டு (8) சீனக் கப்பல்களிடமிருந்து பெருந்தொகை அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டிருப்பதாக பொய்யுரைக்கப்பட்டுள்ளதாக பதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சரத்குமார குணரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
இந்த 8 சீனக் கப்பல்களில் மூன்று கப்பல்கள் மாத்திரம் இரண்டு தடவைகள் பணம் செலுத்தியுள்ளன. ஏனைய கப்பல்கள் எதுவித பணத்தையும் செலுத்தவில்லை. அந்த ஐந்து கப்பல்களும் எதுவித மீன்களும் இன்றியே கரையை வந்தடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
இலங்கைக் கொடியுடன் மீன்பிடியில் ஈடுபடும் கப்பல்கள் வருமானத்தில் 10 வீதத்தை நாட்டுக்குச் செலுத்தும். அவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் இலங்கை கரைக்குக் கொண்டு வந்தே விற்பனை செய்யப்படவேண்டும். இதனூடாக பாரிய அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என முன்னாள் அமைச்சர் கூறிவந்தார். அவர் கூறியதைப் போன்று பாரியளவு வருமானம் எதுவும் ஈட்டப்படவில்லை.
மூன்று கப்பல்கள் இரண்டு தடவைகள் மாத்திரம் பணம் செலுத்தியுள்ளன. எஞ்சிய 5 கப்பல்கள் எதுவித மீன்களும் இன்றியே கரையை வந்தடைந்தன. அவை பணம் எதனையும் செலுத்தவும் இல்லை. முன்னாள் அமைச்சர் கூறியதைப் போன்று இந்தக் கப்பல்கள் பணத்தைச் செலுத்தியிருந்தால் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் உள்ள அனைவருக்கும் இதன் வருமானத்தைக் கொண்டே சம்பளத்தைக் கொடுத்திருக்க முடியும்.
இதில் ஏதோ பொய்யுள்ளது. இரகசிய மொன்று மறைந்துள்ளது. அந்தக் கப்பல்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் நடுக்கடலிலேயே வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டு விட்டன. இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்கும், குறித்த கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் மீன்பிடிப்பதே உள்நாட்டு மீனவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை மாத்திரமன்றி, பிரச்சினையை ஏற்படுத்துமாயின் அவற்றின் ஒப்பந்தங்களை ரத்துச் செய்து கப்பல்களின் மீன்பிடியை நிறுத்துமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
குறித்த கப்பல்கள் மீன்பிடியில் மாத்திரமன்றி வேறேதாவது வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவை குறித்துக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். சுங்கத்திணைக்களத்தின் உதவியுடன் இவற்றைக் கண்காணிக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் பிடிக்கப்படும் மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்துள்ளமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையை பழிவாங்கும் எண்ணத்துடன் இவ்வாறானதொரு தடை கொண்டுவரப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உருவாகியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் போது புதிது புதிதாக அவர்கள் நிபந்தனைகளை விதிக்கின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமன்றி சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடும் 2400ற்கும் அதிகமான நீண்டநாள் மீன்பிடி கலங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகமானது. தேவைக்கு அதிகமானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது என்றும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkuy.html
மைத்திரிக்கு பௌத்த சங்க சபை ஆதரவு!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 12:57.57 AM GMT ]
இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்;த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்..
இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkuz.html
மூன்றாவது மஹிந்த சிந்தனை தயாரிக்கப்படுகின்றது!– அமைச்சர் சுசில்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 01:11.26 AM GMT ]
மூன்றாவது மஹிந்த சிந்தனை, நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு திருத்தம் அடங்கலாக நாட்டு நலனுடன் தொடர் புள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எதிர்தரப்பு உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் நடைமுறைச்சாத்தியமற்றவை. அதிலுள்ளவாறு ஜனாதிபதி முறையை மாற்றுவது இலகுவானதல்ல.
தேர்தல் முறையை மாற்றுவதற்கு 2/3 பெருபான்மை மட்டுமன்றி சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றார்.
ஐ.ம.சு.முன்னணியின் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்படும் - அரசாங்கம்
அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விரிவான அரசியல் அமைப்பு திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவொன்று அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
2005ம் ஆண்டு, 2010ம் ஆண்டைப் போன்றே இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளார்.
விரைவில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப் போவதாக அறிவித்ததனைத் தொடர்ந்து அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்வது குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வரும் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், முக்கிய திருத்தங்களை எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றில் சமர்ப்பித்து திருத்த முடியும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku0.html
ஜனநாயக சக்தியினூடாக பிரச்சினைக்குத் தீர்வு காண வழி பிறக்கும் என எதிர்பார்க்கிறோம்!- சுமந்திரன் எம்.பி.
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 01:26.38 AM GMT ]
சட்டத்தின் ஆட்சி வீழ்ந்துள்ள நிலையில், தற்போது கட்டியெழுப்பப்படுகின்ற ஜனநாயக சக்தியினூடாக நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண வழி பிறக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரஜைகள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு - 02 ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கு அறிக்கையொன்றினூடாக விடுத்த செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு பிரஜைகள் சக்தி அமைப்பு சுமந்திரன் எம்.பிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், கூட்டத்தில் பங்குபற்ற முடியாதமை குறித்து பிரஜைகள் சக்தி அமைப்புக்கு அனுப்பிவைத்த செய்தியில், அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை.
அதனால், இன்று (நேற்று) பிரஜைகள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் பங்குபற்றுவது உசிதமானதல்ல.
நான் இதில் பங்குபற்றினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரருக்கு ஆதரவளிக்கின்றது எனக் காட்ட முயற்சிப்பர், முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதுடன், நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஏனையோருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்.
ஆனால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்தும் நாம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்த சக்திகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ் மக்கள் நாட்டில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இன்று முழுநாட்டு மக்களும் அதை அனுபவிக்கின்றனர். சட்டவாக்க சபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரம் தனியொருவரின் குடும்பத்திடம் உள்ளது.
பொருளாதார பிரச்சினை உள்ளதுடன், வாழ்க்கைச் செலவு வானளவு எட்டியுள்ளது. வேலை செய்யும் மக்களின் மீது அசாதாரணமான முறையில் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி வீழ்ந்துள்ளது. நாட்டில் ஆட்சி இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசின் உயர் மட்டத்தினரால் பாதுகாக்கப்படுகின்றனர்.
தற்போது கட்டியெழுப்பப்படுகின்ற ஜனநாயக சக்தியினூடாக நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண வழி பிறக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku1.html

Geen opmerkingen:

Een reactie posten