தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

அபிவிருத்திக் குழுக் கூட்ட மோதல்! கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு



போர்க்குற்றம் தொடர்பில் பேச அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை!- சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 01:02.17 AM GMT ]
மக்ஸவெல் பரணகம ஆணைக்குழுவுக்கு போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்த அதிகாரம் வழங்கிய நிலையில் அரசாங்கத்துக்கு போர்க்குற்றம் தொடர்பில் பேச அதிகாரம் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் படையினரை தனிமைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் காட்டிக் கொடுத்துள்ளது என்றும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
பரணகமவின் குழுவுக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டமையானது, அதனை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தியமைக்கு சமனாகும்.
மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை, போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
இதன்போது குற்றம் நிரூபிக்கப்படுமானால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiv5.html

அபிவிருத்திக் குழுக் கூட்ட மோதல்! கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 02:28.37 AM GMT ]
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூடமைப்பினருக்கும். ஈ.பி.டி.பி யினருக்கும் இடையில் கருத்து மோதல்களாக ஆரம்பித்து, இறுதியில் அடிதடியாக முடிவடைந்திருந்தது.
இதில் ஈ.பி.டி.பியினரால் தமிழ்த் தேசியக் கூடமைப்பினர் தாக்கப்பட்டதுடன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் காயமடைந்திருந்தார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தம்மைத் தாக்கியதாக ஈ.பி.டி.பியினர் பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடனே வெளியேறியும் விட்டனர்.
இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களைத் தாக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் ஆகியோரை இன்று காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீட்டுக்கு வந்த பொலிசார் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட காகிதத்தை வழங்கியதுடன், அது சம்பந்தமாக கேட்டபோது தமிழில் நாளை விசாரணைக்கு வருமாறு கூறினர்.
அக்காகிதத்தில் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் எதுவும் இடப்படவில்லை. இது சம்பந்தமாக அழைக்கப்பட்டவர்கள் எமது வடமாகாண அவைத்தலைவர் மற்றும் எமது முதல்வருடன் கலந்துரையாடி அடுத்த முடிவுகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiv6.html

Geen opmerkingen:

Een reactie posten